பக்கம்:உலகத்தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

உலகத் தமிழ்


காகச் சிறு திட்டமொன்றைத் தீட்டி, ஒழுங்குபடுத்திக் கொண்டோம்.

உ. ப. சே. பொது அவைக் கூட்டத்திற்கான திட்டக் குறிப்பையும், முதியோர் கல்வி முன்னோடித் திட்டத்தையும் விரைந்து தட்டெழுத்தாக்கித் தந்தனர் அலுவலர்.

ஜினிவாவில் ஆக வேண்டியது முடிந்தது. பகல் உணவிற்குப்பின் திட்டமிட்டபடி, பிற்பகல், 2-30 மணிக்கு ஜினிவாவிலிருந்து பாரிசிற்குப் பயணமானேன். விமான நிலையத்திற்கு நாதனும் அவரது மனைவியும் வந்திருந்து வழியனுப்பினார்கள்.

ஏர் இந்தியாவின் பிரதிநிதியொருவர், ஜினிவா விமான நிலையத்தில் என்னோடிருந்து, பயணச் சடங்குகளை எளிதாக முடித்து வைத்தார். அவர் சுவிஸ் நாட்டவர். அவரது மனைவியும் அலுவல் பார்த்துச் சம்பாதிப்பதாகக் கூறினார்.

தம் நாட்டில் வருமான வரிப்பளு அதிகமென்று குறைப்பட்டுக் கொண்டார் அவர். எவ்வளவு சுமை என்றேன். இருவரது வருவாயில் நூற்றுக்கு இருபது விழுக்காடு வரி வங்கிக் கொள்வதாகக் குறைப்பட்டார். நானும் என்னைப் போன்ற சம்பளக்காரர்களும் இங்கே விழிபிதுங்க வரி கொடுப்பதைக் கூறி, அவரை ஆறுதல் படுத்த நினைத்தேன். வினாடியில் தெளிவு மின்னிற்று. ‘தோழனோடும் ஏழைமை பேசேல்’ என்னும் பழமொழி நினைவிற்கு வந்து வாயை அடைத்தது. (குறையில்லாப் பெரியவனாகவே பாரிசிற்குப் புறப்பட்டேன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/59&oldid=481009" இலிருந்து மீள்விக்கப்பட்டது