பக்கம்:உலகத்தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர்களின் பணி

63


பேராசிரியர் தனிநாயகம் உள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். கண்ட காட்சி என்ன? பேராசிரியர் சுப்பிரமணியம், டாக்டர் பிலியோசா, திரு. நாகசாமி ஆகிய மூவரும் தனித்தனியே வரிசையாக நின்று கொண்டு மெய் மறந்து மடமடவென்று பணி புரிந்து கொண்டிருந்தார்கள். எதிரே அடுக்கி வைக்ககப் பட்டுள்ள தாள்களில் ஒவ்வொன்றை எடுத்து இந்தியர் இருவரும் கொடுக்க, பிரெஞ்சு நண்பர் பிலியோசா அவற்றை உறையில் இட்டுக் கொண்டிருந்தார். சிவ பூசையில் கரடி புகுந்தாற்போல் புகுந்துவிட்டேன். தெரியாத்தனமே. முதலில் பிலியோசாவிற்கு அறிமுகஞ் செய்யப்பட்டேன். அவர் கைகுலுக்கி விட்டு வேலையில் மூழ்கிவிட்டார். மற்றவர் இருவரும் அப்படியே.

‘ஆகா! இவர்கள் தமிழ்ப்பற்று எத்துணை! எத்துணை’ என்று பெருமிதம் கொண்டேன். பல்லாயிர கிலோமீட்டர் கடந்து வந்து, கவர்ச்சிகரமான பாரிசின் காட்சிகளையும் கலைகளையும் கூடச் சிந்தியாமல், பேராசிரியப் பெருமக்களெல்லாம், எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த சாதாரண மக்கள் செய்யவேண்டிய ‘மடிப்பாளர்’ பணியைச் செய்து கொண்டிருக்கிறார்களே! இவர்களது தமிழ்த் தொண்டிற்கு யாரும் கை கொடுப்பார் இல்லையே என்று ஏங்கினேன்.

‘உங்கள் பணியில் நானும் சிறிது நேரம் பங்கு கொள்ளலாமோ’ என்று கேட்டுப் பார்த்தேன். ‘பரவாயில்லை. நாங்களே முடித்து விடுகிறோம்’ என்ற பதில் வந்தது. அதோடு விட்டு விட்டேன்.

மாநாட்டுப் பணியில் பங்கு கொண்டு உதவ முன் வந்தும் மாநாட்டாளர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/62&oldid=481161" இலிருந்து மீள்விக்கப்பட்டது