பக்கம்:உலகத்தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உலகத் தமிழ்


நாங்கள், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று நின்று கொண்டிருந்தோம்.

மாணவனாக நிற்கும் தண்டனை அனுபவித்ததில்லை. அதற்கு ஈடு பாரிசில், இந்த அணிவகுப்பில் கூடியிருந்த மக்களின் இடியிலிருந்து மறைத்திருவாளர்கள் ஞானப் பிரகாசம், இராசமாணிக்கம், காசி ஆகியோர் கூடி வளைத்துக் கொண்டு என்னைக் காத்தனர்.

அணிவகுப்புப் பெருநடை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. காலாட்படை, குதிரைப்படை, பீரங்கிப் படை, டாங்கிப் படை, ஏவுகணைப் படை, பல்வேறு நாசக் கருவிப் படை, மருத்துவப் படை என நீண்ட அணிவகுப்பினைக் கண்டோம். பல்வகைப் போர் விமானங்கள் வானில் பறந்து சென்று நாட்டின் வலிமையை முழங்கின.

கவண் எறிவதிலே தொடங்கி ஏவுகணை வரை நாசக் கருவிலேயே வளர்ந்துள்ள மானுடத்தைக் கண்டு வருந்தி வாடினேன். நுட்பத் தொழிலாளர் பல இலட்சம் பேர்களையும், மலைமலையாக மூலப் பொருள் களையும், கோடிகோடிப் பணத்தையும் பாழாக்கி, பட்டாளத்தையும் போர்க் கருவிகளையும் குவிக்கும் மானுடம், அதை விடுத்துத் தங்கள் தங்கள் பகுதி வாழ் மக்கள் அனைவருக்குமாகிலும் மனித வாழ்வு.நல்வாழ்வு அளிக்கப் பட்டிருக்கலாமே என்று ஏங்கிற்று என் பேதை உள்ளம். அறிவியல், நுட்பத் தொழில் இயல் ஆகியவற்றின் துணைகொண்டு, எங்கோ வெகுதுாரத்தில் உள்ள நிலாவையும் எட்டிப் பிடித்துவிட்டதே மானுடம்! விரைந்து சென்று, விரிந்த உலகங்களைக் காணக் கற்ற மனித சமுதாயம், அகந்தைக் கிழங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/67&oldid=481126" இலிருந்து மீள்விக்கப்பட்டது