பக்கம்:உலகத்தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரிசில் தமிழ் முழக்கம்

71

படவில்லை. மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்து ஜீவ சக்தியுடன் இன்றும் விளங்குகிறது” என்று அவர் கூறியபோது ஆர்வம் பொங்கி வழியாமல் இருக்குமா? ‘உயிராற்றல்’ என்ற இன்றைய தமிழ் வழக்கைப் பாரிசு வாழ் பெரியவர் கையாளாதது விலகியிருத்தலின் விளைவு.

பழங்குடி மக்களான திராவிடர்களின் நாகரிகமே, இந்திய உப கண்டத்தின் நாகரிகத்திற்கு முன்னோடி என்பது ஆராய்ச்சியாளர் கருத்து என்று சுட்டிக் காட்டினார் ஆதிசேஷய்யா.

“உலக சக்தியையும், வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கையையும் குறளிலே கண்டார். ஆல்பர்ட் சுவைட்சர். இலக்கியம், தத்துவம் இவற்றில் தனிச் சிறப்புடன் விளங்கும் இப் புராதன நூல் எளிய நீதி நெறியின் வழியே இயங்கும் மனித இனத்தையே இலட்சியமாகச் சித்திரிக்கிறது என்று அவர் கூறுகிறார்” என்று இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதராக விளங்கி மறைந்தவர் மூலம் திருக்குறளின் பெருமையைப் பன்னாட்டு அறிஞர்களுக்கு நினைவு படுத்தினார்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதை நினைவு படுத்தி தமிழனின் ஆழ்ந்த இதய பூர்வமான மனிதாபி மானத்தை உலகிற்குக் காட்டினார். அதன் பூரண சமாதான இயல்பே தனிச் சிறப்பு ஆகும் என்றார், ‘முதலியார், செட்டியார்’ என்பதை மறக்க முடியாத இக்காலத் தமிழரை எண்ணி ஏங்குவோன் பித்தன் அன்றோ?

“தமிழ் ஆராய்ச்சி, சங்க காலத்தோடு நின்று விடக் கூடாது, அண்ணாதுரை கால இலக்கியத்தையும் ஆராய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/70&oldid=481131" இலிருந்து மீள்விக்கப்பட்டது