பக்கம்:உலகத்தமிழ்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

உலகத் தமிழ்


காஞ்சியிலும், பாலாறு கடலோடு கலக்கும் இடமாகிய வாசவசமுத்திரம், வயலூர் ஆகிய ஊர்களிலும் கண்ட புதைபொருள்களைப் பற்றிச் சொல்லப்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், காஞ்சியில் ஆராய்ச்சி நடப்பதை, நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.

சென்னைப்பல்கலைக் கழகத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர்த் திருச்சி மாவட்டத்தில் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியைப் பற்றியும் திரு நாகசாமி குறிப்பிட்டார். திருச்சியில்,திருக்காம்புலியூர், ஆலக்கரை, உறையூர் ஆகிய மூன்று இடங்களில் சென்னைப் பல்கலைக் கழகத் தொல் பொருள்துறை ஆராய்ச்சி செய்தது. நூற்றுக் கணக்கான தொல் பொருள்களை அகழ்ந்தெடுத்தது. அவற்றின் காலம் கி. மு. முதல் நூற்ரறாண்டு முதல் கி. பி முதல் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது. அவற்றை வகைப்படுத்தி மதிப்பிட்டு, அறிக்கை வந்தது. இதைப்பற்றி வெகு சில செய்திகளே கூறினார். ஏன்? பேராசிரியர் மகாலிங்கத்தின் மேல் பொறாமையா? அச்சிடப்படாத அறிக்கை அது. எனவே, பல குறிப்புகள் கொடுக்கவில்லை.

ஒரு பல்கலைக்கழகத்தின் பணிகள் பல. அவற்றிலே சிறந்தது அறிவின் எல்லைகளை நகர்த்திக் கொண்டே போவது. அதாவது புதிய உண்மைகளை அறிந்தால்- புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தால் போதுமா? குடத்தில் இட்ட விளக்காக வைக்கலாமா? ஆகாது. வெளியிடவேண்டும்; நூல்களாக வெளியிட வேண்டும் உலகறியச் செய்ய வேண்டும்.

பயிருக்குப் பருவம் துணை நல் விளைச்சலுக்கு மண் வளம் தேவை; இல்லையேல் ஏற்ற உரமாவது வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/87&oldid=481184" இலிருந்து மீள்விக்கப்பட்டது