உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பெரியார் காந்தி 20 நானிலமெங்குமுள்ள கோள்; அறவுரை. நல்லறிவாளர்களின் வேண்டு சதிச் செயலைக் கண்டுபிடித்து, அவர்களைச் சட்டம் தண்டிக்கும். சர்க்காருக்கு அதற்கான சக்தியும் திறமையும் இருக்கிறது. நமது ஒற்றுமையுடன் கூடிய நிலை, அதற்குப் பக்க பலமாக நிற்கவேண்டும். ஏகாதி பத்தியத்திடமிருந்து விடுதலையைப் பெற்று, அந்தச் சாசனத்தைத் தயாரிக்கும் அரும் பணியிலே ஈடுபட்டு, அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், சுழல் துப்பாக்கிக்கொண்டு, அவ்வளவு பேரையும், ஏழு அமைச்சர்களையும் சுட்டுக் கொன்றான், பர்மாவில் சில காலத்துக்கு முன்பு. இன் றும், குண்டு பாய்ந்த அந்த உடலங்களை வைத்துக் கொண்டுள்ளனர். அமைச்சர்களை, அவர்களின் தலைவர் அவுங்சானைச் சுட்டு வீழ்த்தினால், அரசு கவிழ்ந்துவிடும் என்று அறிவிலிகள் எண்ணினர். ஆனால், பர்மா நிதானம் தவறாமல், துக்கத்திலே தன் மனதைப் பறிகொடுத்துவிடாமல், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கடமையைச் செய்துவருகிறது. அது நம் அண்டை நாடு - சிறிய நாடுதான். அந்தச் சிறிய நாடு காட்டிய பெரிய உறுதி, நமக்கும் வேண்டும். மனக் குழப்பம் மனமாச்சரியம் எழக்கூடாது. உலகின் கண்கள் நம்மீது பாய்ந்துள்ள நேரம் உரிமை கிடைத் துள்ள வேளை - உலுத்தர் சிலரின் செயலால் உள்ளம் கெட்டுவிட இடந்தராமல் உறுதியுடன் நின்று, நாட்டு நிலையைக் காப்பாற்றுவோமாக!