உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமரை இழந்தோம். யமுனை நதி - இந்திய துணைக்கண்டத்து மக்கள் மட்டுமல்ல, உலகிலேயே பல இடங்களிலும் உள்ள மனிதாபிமானமும் நல்லறிவும் விடுதலை வேட்கையும் கொண்ட மக்கள் அனைவருமே, சந்திய கண்ணீரையே, கொண்டு செல்கிறது. அவ்வளவு கண்ணீரும் சேர்ந்து நீரில் கலக்கிறது. உலகைத் திருத்தவேண்டு உழைத்த உத்தமர்கள் எத்தகைய தியாகக் கடலிலே வீழ்த்தப்பட்டனரோ, அதே நிலைக்கு, மோகன்தாஸ் கரம சந்த் காந்தியாரின் வாழ்க்கையும் உத்தமர் அனைவரும் சென்ற வழியே சென்று தீர வேண்டி நேரிட்டுவிட்டது. கடல் மென்று யமுனை நதிக்கரையிலே, 31-1-48 மாலை 5- மணிக்கு மூட்டப்பட்ட தீ, அங்கு காந்தியாரின் சடலத்திற்கு மட்டுமல்ல, உலகிலே இலட்சக்கணக்காண மக்களின் அடிவயிற்றிலே கூட அல்ல, இருதயத்தையே தீண்டிய தீ ஆகும். உலக வரலாற்றிலே, இதுபோன்ற துக்க கரமான, துடிதுடிக்கச் செய்யும், திடுக்கிட்டுத் திகைக்கச் செய்யும் நிகழ்ச்சி, வேறு இல்லை. இந்திய