உத்தமரை இழந்தோம் 27 நிலைகுலையச் செய்துவிட்டது; மனம் பதறுகிறது. மக்கள் மனம் பதறியுள்ள நிலையிலே, நாட்டுத் தலை வர்கள் தான், ஆறுதலைத் தரவேண்டும்- துக்கத்தை ஆளுக்கோர் அளவு பங்கிட்டுக் கொள்வதன் மூலமும், இந்தக் காட்டு முறையை நாட்டிலே கண்டோமே என்பது பற்றி எண்ணித் தலை இறங்குவதன் மூலமும் அவர் கீழே சாயும் வரையிலே அஞ்சாமல் பணிபுரிந்தது போல, 'வெறியர்கள் டில்லியில் உலவுகிறார்கள் : வெடி குண்டும் வீசினார்கள்' என்பதறிந்திருந்தும் மாபெருங் கூட்டத்திற்குப் பாதுகாப்புத் தேடாமல் வந்த மாண்பு போல, நாமும் இந்தத் தாங்கமுடியாத துக்கத்தையும் தாங்கிக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும். காந்தி யாரின் புகழொளியை அல்ல. அவருடைய உழைத்து அலுத்த உடலைத்தான், வெறியன் சுட்டு வீழ்த்தினான். எனவே, கண்ணீரைத் துடைத்துக்கொள்வோம்: மன வேதனையைக் கட்டுக்குக் கொண்டுவருவோம்; ரவரும் தத்தம் வாழ்நாளில், மக்கள் பணிசெய்வதே, மறைந்த மாபெருந் தலைவருக்குக் காட்டும் மரியாதை, செலுத்தும் காணிக்கையாகும் என்பதை அறிந்து யமுனைக்கரையிலே மூண்ட தீயை, தியாக தீயாகக்கி, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். அவர் விரும்பியது அதுதான் - அவர் பணிபுரிந்ததும் அதற்கே, குரோதம் நீங்கித் துவேஷத்தை விரட்டி, அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நாட்டுப் பணிபுரியுங்கள்-என்றே அவர் கூறி வந்தார் - அந்தப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத் திலேயே, மாபாவியால் கொல்லப்பட்டார். அவரு டைய மறைவு, மனவேதனை தருவதோடு நில்லாமல், - அவ
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/28
Appearance