28 உலகப் பெரியார் காந்தி நமது மனதுக்குப் புதிய உறுதியைக் கொடுத்துப் புதிய உண்மையைக் காட்டுமாக. மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்: அவரை இழந்தோம் அவனி அவரை மறவாது! உலகிலேயே படை பலமும் ராஜ தந்திர பலமும் மிகுந்ததோர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றி காணமுடியும், ஆயுத பலமுமின்றி," என்ற திடமனதை எந்த உத்தமர் உண்டாக்கினாரோ, அவரை ஏகாதிபத்தியமே பணிந்துவிட்ட நேரத்தில், எவனோ வெறியன், சுட்டுவிட்டான். இந்த நாடும் உலகமும் இதனை மறப்பதற்கில்லை. நமது வாழ்நாளிலே, நாடு விடுதலை பெறக் கண்டோம்; நாம் சாகுமுன் ஆங்கில நாட்டுக்கு நாமோர் அடிமை என்று இருந்த இழிவு நீக்கப்பட்டு, அதனால் நமது மக்களெல்லாம் தலை நிமிர்ந்து நின்று, பூரித்து நமது தலைமுறை மகத்தானது என்று மார்தட்டிக் கூறினோம். இன்றோ, மாபாவி யினால் மகாத்மா கொல்லப்பட்ட காலத்திலே வாழ்ந்த வர்கள் நாம் என்ற துக்கம், மனதைப் பிய்த்துத் தின்னுகிறது. அவருடைய முப்பதாண்டுப் பணியிலே, ஒரு கடுமையான சொல், ஒரு நேர்மையற்ற செயல், ஒரு சுய நலத் திட்டம் இருந்ததில்லை. அவருடைய சேவை யினால் ஏற்பட்ட செல்வாக்கு இந்தியாவின் ஒளியையும் ஆசியாவின் புகழையும், நிறத்திமிர்கொண்டு இறுமாந் திருந்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் கிலி உண்டாகக்
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/29
Appearance