உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைக் உத்தமரை இழந்தோம் 29 கூடிய அளவுக்குப் பரப்பிற்று. அவருடைய மொழி கேட்க வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்கள் டோடி வந்தனர். அவர் மண் குடிசையிலே தங்கினால். அங்கு செல்வதை மதிப்பளிக்கக்கூடியதென்று மன்னர் மன்னர்கள் எண்ணினர். அவருடைய மறைவுகேட்டு மாநிலமே துடிதுடித்ததுபோல, வேறு எங்கும் எந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை. புதிய மார்க்கம் துவக் கிய புத்தர், வீரத்தாலும் பிறகு விவேகத்தாலும் இந்தியா வின் புகழை வளரச்செய்த அசோகன், பெரிய வல்லரசு களைக் கட்டி ஆண்ட மன்னர்கள் ஆகியோர் படித்தவர் களுக்குமட்டுமே தெரியக்கூடிய நிலை பெற்றனர். மகாத்மாவையோ, மாநிலம் முழுவதும், படித்தவர், பாமரர், பாராளும் மன்றத்தினர் அனைவரும் அறிந்து கொண்டதுடன், அவர்களின் மனதிலே, அவர் இடம் பெற்றார். சத்தியம், அஹிம்சை எனும் இரு தத்துவங் களை நாடு கொள்ளவேண்டுமென்பதை, அவர் எப் போதும் வலியுறுத்தி வந்தார். அரசியலிலே மோசடி களும், படுகொலைகளும் நிகழ்ந்தபோதும், அவர் மனம் வேதனைப்பட்டதேயன்றி, அவர் அந்த இரு தத்துவங் களை வலியுறுத்தத் தவறவில்லை. கடைசிவரையில் அந்தக் கொள்கையை அவர் கொண்டிருந்தார். நாடு, அந்தத் கொள்கை வழி நிற்கவில்லையே என்ற எண்ணம் அவர் மனதிலே கிளப்பிய வேதனைப் புயல் கொஞ்ச மல்ல. கடந்த சில மாதங்களாகவே, இந்த மன வேத னையை அவர் எடுத்துக் கூறிவந்தார். எவரும் இயலா தது என்று எண்ணி, போகத் துணிவு பெறாமல் இருக் கும் இடத்துக்குச் சென்று காரியம் செய்ய அவர் முன்