30 உலகப் பெரியார் காந்தி வந்தார். படுகொலைகள் நடைபெற்ற நவகாளி, கல்கத்தாப் பகுதிகளிலே, அவர் கிராமம் கிராமமாக ஒற்றையடிப் பாதைகளிலே, வயல் வரப்புகளின் மீது குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று நொந்த உள்ளங் களுக்கெல்லாம் ஆறுதல் அளித்தார். மிருகத்தன் மையை மாற்றினார். மக்களிடம் புதியதோர்மனமாறுதலை ஏற்படுத்தினார். ஆபத்து நிரம்பிய இடம், அறிவற்ற மூர்க்கர்கள் உலவிய இடம் என்று பயந்தனர் பலரும்- அவருடைய புன்சிரிப்பு அவ்வளவுக்கும் பதிலளித்தது என் உயிரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் - என்று கூறினார். எரிமலைமீது நடந்தார்: தீ அண்டவில்லை-- ஆனால்- சர்க்காரின் தலைமைப் பீடத்தைத் தன்னிடம் கொண்ட டில்லியில், அக்கிரமம் நடந்துளீட்டது. சாம்ராஜ்யங்களின் சவக்காடு, இந்தப் பாழாய்ப் போன டில்லி, இது நமக்குத் தலைநகராக இருக்க வேண்டாம்" என்று கிருபளானி போன்ற பல தலை வர்கள் சொன்னார்கள், உண்மையிலேயே டில்லியிலே முன்னம் அமைக்கப்பட்ட பெரிய பெரிய சாம்ராஜ்யங் கள் அவ்வளவும், சதிச்செயலால், படுகொலையால், பாவி களின் துரோகத்தால், சரிந்துபோயின. சவக்காடு - சாம்ராஜ்யங்களின் , சவக்காடு - ஆம். - அது மட்டு உலகைத் திருத்த உழைத்த மல்ல - இப்போது, உத்தமரையே சாகவைத்த துரோகபுரியாகிவிட்டது. டில்லியிலே, என்ன இருக்கிறது என்று உலகிலே, எதிர் காலத்திலே, கேள்வி கேட்கப்படும்போது, நாமும் பின்
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/31
Appearance