உத்தமரை இழந்தோம் 31 சந்ததியும், எப்படிப் பதில் கூறமுடியும்-தலை கவிழ்ந்து, தழதழத்த குரலிலே, 'மகாத்மாவை மாபாவி கொன்ற இடம் அந்த இடம் அந்த டில்லி " என்று கூறிக் கதற வேண்டும். மகாத்மா கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அவருடன் சர்தார் பட்டேல் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சில், காலம் போய்விடுவதை அறிந்து, தன் அன்புரை கேட்க மக்கள் கூடி இருப்பரே என்ற எண்ணம் கொண்டு, சர்தாரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றார் - மீண்டும் சந்திக்கும் போது படேல் கண்டது குண்டு பாய்ந்த மார்பும், அப்போதும் மலர்ச்சி குன்றாத முகமும் கொண்ட மகாத்மாவின் ஆவி பிரியும் கோலத்தை, துக்கந் துளைக் கும் நிலையிலே உள்ள நாம், அவர்களைச் சற்று நம் அகக்கண்முன் கொண்டுவந்து பார்க்க வேண்டும். சர்தார், நேரு, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார், சரோஜினி அம்மையார், தேவதாஸ் இவர்களின் உள்ளம், இந்தச் செய்தியைத் தாங்கமுடியுமா? எவ்வளவு தொடர்பு, எத்தகைய தொடர்பு, எத்தனை ஆண்டு களாகத் தொடர்பு, கஷ்டத்திலுல் சுகத்திலும் கலந் திருந்த அவர்களின் உள்ளம், எப்படி இருந்திருக்கும், பிர்லா மாளிகையிலே, அவருடைய உடலம் இருந்த நிலையைக் கண்டபோது? அவர்கள், அந்தத் துக்கத் தைத் தாங்கிக் கொண்டுள்ளனர். நாட்டு மக்களின் துக்கத்தைத் துடைக்கும் கடமை உணர்ச்சியுடன், அவர்களின் பக்கம் நின்று, நாமும், இந்தச் சகிக்கமுடி யாத துக்கத்தைத் தாங்கிக்கொள்வோம்.
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/32
Appearance