உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உலகப் பெரியார் காந்தி உலகிலே உள்ள எல்லா நகர்களிலும், மக்களின் மனம் துடிதுடித்துப் போயிற்று. தூர தேசமான அமெரிக்காவிலே அழுகுரல். பற்பல நாடுகளிலேயும் பிரலாபம். எவரும், ஆ-ஆ என்று அலறிய நிலை, எங்கும் ஏற்பட்டதில்லை, இத்தகைய கோரச் சம்பவம். கட்சிகளைக் கடந்த கர்மயோகி துக்கம் நம்மைப் பிணைக்குமாக காலை 11 மணிக்குப் புறப்பட்ட பிரேத ஊர்வலம், யமுனைக்கரை போய்ச்சேர, மாலை ஐந்தாயிற்று - ஜன சமுத்திரத்தைக் கடந்து சென்றது கதறும் மக்களைக் கடந்து சென்றது - ஐந்து மைல் இருக்குமாம், அந்தப் பாதை. அவ்வளவு இடமும் மக்கள் கூட்டம். ஆனால் அந்த ஐந்து மைல்களில் மட்டுமல்ல. இந்தியாவின் 2000 × 1000 மைல்கள் என்றுள்ள அளவு பூராவிலும் உள்ள நகரம். கிராமம் அவ்வளவு இடமும், மக்களின் சோகப் பயணமே நடந்தது. யமுனையை நாமெல்லாம் காணவில்லை-- ஆனால் பல கண்ணீராறுகளைக் கண்ணீர் ததும்பும் கண்களால் கண்டோம். அங்கே மாலை 6 மணிக்குத் தீயிட்டனர் - இங்கோ, பாதகன் அவரைக் கொன்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தும், நமது இருதயத்திலே தீயிடப்பட்டது: ஆறாத அணை யாத, தீ, ஆத்திரக்காரன் நமது நாட்டின் உயிருக்கு வைத்த தீ நானிலமெங்கும் நம்மை அறியச் செய்த உத்தமரின் உடலிலே தீ வைத்த அந்த உலுத்தன், எவ்வளவு கொடிய துரோகம் செய்துவிட்டான்