என்பதை உத்தமரை இழந்தோம் 33 எண்ணும்போதே, நமது இருதயத்தில் பட்ட தீ, மேலும் மூண்டுவிடுகிறது. நாம், மிக மிக, மகத்தான நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டோம். கட்சிகளை, கட்டுகளை, ஆசாபாசங்களை, கோபத் துவே ஷங்களைக் கடந்து நின்ற ஒரு உத்தமரை இழந்து விட்டோம். இந்தத் துக்கம், கட்சிக் குரோதச் சுவர்களை இடித் தெறிந்து, நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கிறது. பல தலைவர்களின், ஆறுதலுரைகளிலும் இந்த எண்ணம் திண்ணமாகத் தெரிகிறது. மனதைக் கட்டுக்குக் கொண்டு வரவேண்டிய நேரம் - தவறினால், துக்கம், மக்களைக் கல்லாக்கிவிடும் - அவ்வளவு ஆழப் பாய்ந்துவிட்டது துக்கம். கடைசி முறையாக, அவரைக்காண, இந்தியாவிலே உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களெல்லாம் ஓடோடி வந்து, அவர் பக்கம் நின்று புலம்பினர். சின்னாட் களுக்கு முன்பு, தங்கள் ஒப்பற்ற தலைவர் அவுங்சானை, கொலைபாதகனால் இழந்து தவிக்கும் பர்மியப் பிரதிநிதி களும் வந்திருந்தனர். நின்றனர் - வைசிராய் கவர்னர்கள் அவர் காலடி அவர் நிலைகண்டு வாய்விட்டு அழுதார் - வல்லரசுகளிலே எல்லாம், வருத்தம் தெரி வித்து அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால், இவை அவ்வளவும், உள்ள துக்கத்தை அதிகப்படுத்துவதாக அமைகின்றனவே யொழிய, குறைக்கும் வழிகளாகத் தோன்றவில்லை. எந்தவிதமான ஆறுதலை நாடினாலும், 3
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/34
Appearance