34 உலகப் பெரியார் காந்தி - அதனைத் தாண்டி அப்பால் நம்மை இழுத்துச் சென்று, இந்தத் துக்கம் தாக்குகிறது. இந்தப் பயங்கர நிலையி லிருந்து விடுபடும் ஒரே வழி. இந்த துக்கத்தை, நம்மை ஒரு சேரப் பிணைக்கும் சக்தியாக மாற்றுவதுதான். இந்த மகத்தான வேலையை முன்னிருத்தி, அழுத கண்களுடன் நின்றபோதிலும், அறநெறியைக் கைப் பிடித்து, நிற்போமாக. இவ்வளவு பெரிய கஷ்டத் தைத் தாங்கிக்கொள்வோமானால், இனி நமது வாழ் நாளிலே, நம்மை வதைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலை, எந்தக் கஷ்டமும் பெறமுடியாது. அவர் மறைந்தார்- அவரை அவனி மறவாது - அவருக்கு இருந்த மன உறுதியில் ஆயிரத்திலோர் பாகமேனும் நாம் பெற்றால் தான், அவனி நம்மைக்கண்டு, அவர் வாழ்ந்த நாட்டு மக்கள் தான் இவர்கள் என்று கூறும். மனிதருள் இருந்துகொண்டு, சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெளிவந்து வெறிச்செயல் புரியும் மிருகத்தை அடக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அகில உலகமும் இந்த துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய நிலையைக் காப்பாற்ற, இந்த உறுதியைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். ஏகாதிபத்தியக் கோட்டையைத் தகர்த்து, யுகயுகமாக மூடிக்கிடந்த ஆலயங்களைத் திறந்து, மக்களிடையே புதிய மாண்பைக் காண்பதற்குத் தளராமல் பாடுபட்டு வந்த புனித புருஷரை இழந்துவிட்டோம் - நமது வாழ் இந்த மகத்தான நஷ்டத்துக்கு, பலப்பல தலைமுறைகளுக்குப் பிறகும் ஈடு செய்யக் கூடிய நிலை வராது. நாளிலே நேரிட்ட
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/35
Appearance