உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காண விரும்பிய நாடு 41 வெற்றிபெற்ற பல நாடுகள் செய்யாமல் இருந்துவிட்ட துண்டு - காலங்கடந்தபின் செய்யத் தொடங்கியதுண்டு. இந்தியாவின் விடுதலை சம்பந்தமாகக் கவனித் தாலோ, இவைபோல மட்டுமல்ல, மற்ற நாடுகளிலே. ஏற்படமுடியாத நிலைமை இங்கு இருக்கக் காணலாம். - அடிமைப்பட்ட பல நாடுகளிலே, சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே பிரச்னை - இங்கோ, சுதந் திரமும் வேண்டும், புது சமுதாய அமைப்பும் வேண்டும் என்று கேட்கவேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும் என்று போராடத் தொடங்கிய போது, அன்னிய ஆட்சி ஒழியவேண்டும் என்பது மட்டும் முழக்கமாக இல்லை அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகத் தெரியவில்லை. அன்னிய ஆட்சி மட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன், நின்றுவிட மனமில்லை ஏனெனில் இந்நாட்டு அமைப்பு முறை, தேவையான வேறு மல இலட்சியங்களைக் கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. ஏனவேதான் இங்கு சாதாரணமாக, அடிமைப்படுத்தப் பட்ட மற்ற நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும் என்ற ஒரே முழக்கம் மட்டும் கிளம்பியது போலல்லாமல், அன்னிய ஆட்சி ஒழியவேண்டும். மக்களாட்சி மலர வேண்டும். இந்து - முஸ்லீம் ஒற்றுமை வேண்டும். தொழில்கள் பெருக வேண்டும்.