உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உலகப் பெரியார் காந்தி கல்வி பரவ வேண்டும். ஜாதி பேதம் ஒழிய வேண்டும். தீண்டாமை போக வேண்டும். கிராமம் சீர்பட வேண்டும். வறுமை போக வேண்டும். சுரண்டல் முறை ஒழிய வேண்டும். என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின. மற்ற நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப் போர் சூழ் நிலைக்கும், நமது நாட்டிலே விடுதலைப் போர் நடந்த போதும், அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம் - இதிலேதான், காலத்தை உருவாக்கும் சூட்சமும் இருக்கிறது. எதிர் நளன் சூதாடி ராஜ்யத்தைத் தோற்றுவிட்ட மீண்டும் ராஜ்யத்தைப் பெற்ற கதைக் காலத்திலிருந்து மகத ராஜ்யத்தை சேதிநாட்டரசன் பிடித்துக்கொண் டான், என்றுள்ள சரிதக் காலம் வரையிலே, ஒரு ராஜ்யம். ஒரு அரசன் கரத்திலிருந்து வேறோர் அரச னிடம் சிக்கி, மீண்டும், சொந்த அரசனிடம் வந்து சேரும் சம்பவம். கொடிகள் மாறுவது, அதிகாரிகள் மாறுவது என்ற இவ்விதமான அளவோடுதான் இருக்கும். ஆனால், இக்காலக்தில், அதிலும் இந்தியா வில், நடைபெற்ற விடுதலைப்போர், கொடி மாற்றமோ, அதிகார மாற்றமோ மட்டும் குறிக்கோளாக அமைந்த தல்ல - தன்னாட்சி மட்டுமல்ல, இலட்சியம்; அந்தத் தன்னாட்சி மக்களாட்சியாக, அந்த மக்களாட்சியும் நல்லாட்சியாக, அந்த நல்லாட்சியும் மக்களுக்குப் புதிய