உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் காண விரும்பிய நாடு 43. வாழ்வை, முழு வாழ்வைத் தரக்கூடிய ஆட்சியாக அமைதல் வேண்டும் என்ற இவ்வளவு உன்னதமான இலட்சியத்தையும் உண்டாக்கியதுதான் - எனவேதான் இங்கு, விடுதலைப் போரின் போது கிளம்பியது ஒரு முழக்கமல்ல. பல ; ஒரே ஒரு குறுகிய இலட்சியமல்ல. பரந்த இலட்சியம் எனவே தான் மறைந்த உத்தமர் அன்னியராகிய வெள்ளையர் நீங்கிய, இந்தியர் அரசாள்கிற இந்தியாவைக் காண்பதே எனது இலட்சியம் என்று மட்டும் கூறாமல், பண்டிதர் எடுத்துக் காட்டியது. போல, ஏழை ஈடேறவேண்டும். ஏழை உரிமை பெறவேண்டும். ஜாதிபேதம் ஒழியவேண்டும். ஒற்றுமை மலரவேண்டும். G கவே- என்று கூறினதுடன், இத்தகைய இந்தியா உருவாக வேண்டும், அதுவே என் இலட்சியம், அதற்கே நான் பாடுபடுகிறேன்' என்றும் கூறினார். மற்ற நாடுகளின் நலிவு அன்னிய ஆட்சியின்போது, அதன் விளைவாக ஏற்பட்டதால், அந்த நாடுகளிலே தோன்றிய தலைவர் கள், நாட்டின் நலிவை நீக்க அன்னியரை விரட்டினாலே போதும் என்று கருதினர் - அவர்கள் அங்ஙனம் கருதினத்தில் தவறுமில்லை. அதுபோல இங்கு அன்னியர் விரட்டப்பட்டு, நாடு, தன்னாட்சி பெறுவது மட்டுமே போதும் என்று கருதினால், நிச்சயமாகத் தவறு ஏனெனில் இங்கு, அன்னிய ஆட்சியினால் மட்டுமல்ல அதற்கு முன்பிருந்தே, நமக்கென்று தோன்றிய சில -