44 உலகப் பெரியார் காந்தி அரசர்களாலும் அவர்கள் அனுஷ்டித்த முறைகளா லும், நமது சமூக அமைப்பினாலும் அதன் பயனாக ஏற்பட்ட பழக்க வழக்கங்களாலும் நமது வாழ்க்கை இலட்சியத்தினாலும் அதை ஒட்டி கட்டிவிடப்பட்ட வெட்டி வேதாந்த முறைகளினாலும், நமது மத அமைப் பினாலும் அதைப் பயன்படுத்திக்கொண்ட தந்நலக் காரரின் போக்கினாலும், பலப்பல கேடுகள் முளைத்துக் காடெனக் கிடந்தன. எனவே அன்னிய ஆட்சி அகன்றால் நாட்டின் நலிவு நீங்கிவிடும் என்ற அளவோடு அடிகள் நிற்கவில்லை - அன்னிய ஆட்சியை நீக்குவதுடன், மக்களாட்சிக்கு, நல்லாட்சிக்குத் தடையாக உள்ள சகல கேடுகளையும் நீக்கியாக வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். அவர் காண விரும்பிய காட்சி இந்தியர் ஆளுகின்ற இந்தியா என்பது மட்டுமல்ல, தீண்டாமை அடியோடு ஒழிந்து, மதத்தின் மாசும் தூசும் போக்கப்பட்டு, ஜாதி பேதம் களைந்தெறியப்பட்டு, ஏழையின் வாழ்விலே புதியதோர் கிளர்ச்சி ஏற்பட்டு, நாடு, இலட்சிய பூமியாக இருக்கவேண்டும் என்பதாகும். . நான் காண விரும்பும் இந்தியா இவ்விதமானது - என்று உரைத்துவிட்டார். உயிர் துறக்கும் நேரம் வரையிலே அதற்காகவே உழைத்தார் - அவர் உயிர் பிரியும்போது, அவருடைய மனக்கண்முன், எத்தகைய இந்தியா தெரிந்திருக்கும்? அவர் காண விரும்பிய காட்சியா ! அல்லவே! அவர் காண விரும்பிய இந்தியாவில் கோட்சே இருக்கமுடியுமா இருக்க இடமுண்டா? அவர் காண விரும்பிய இந்தியாவில்
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/45
Appearance