உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அவர் காண விரும்பிய நாடு 45. சேரிகள் உண்டா? அவர் காண விரும்பிய இந்தியா வில் ஜாதிபேதக் கொடுமை இருக்குமா? அவர் காண விரும்பிய இந்தியாவில், ஏழையின் வாழ்வு இருண்டு கிடக்குமா? அவர் அவ்விதமான இந்தியாவை அல்ல, ஏழைக்கு வாழ்வு தரும் இந்தியாவை- எல்லோரும் ஓர் குலம் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்தியா வைக்- காண விரும்பினார். அந்த இலட்சிய பூமியை உருவாக்குவதையே பணியென்று கொள்வதுதான், அவருடைய காலத்திலே பிறந்தவர்களின் கடமை அப்போதுதான் எதிர்காலத் தலைமுறைகள், 'உத்தமர் மறைந்தார் - ஆனால் அவருடைய உள்ளத்திலிருந்த இலட்சியத்தை, அவர் காலத்தவர், உருவாக்கிக் காட் டினர்' என்று பெருமையுடன் பேசுவர். விடுதலைப் போர், அந்நிய ஆட்சியாளரிடமிருந்து நாட்டை மீட்பது என்ற அளவோடு மட்டும் உள்ளது என்ற முறையிலே அவர் கொள்ளவில்லை - அறிவித்தது அது வல்ல - ஒரு இலட்சிய பூமியைக் காட்டிவிட்டுச் சென் றிருக்கிறார். நாட்டை அன்னிய ஆட்சியிலிருந்து விடுவிக்கும் விடுதலைப் போர்க் கட்டம், அன்னியப் படை பலத்துக்கு மட்டுமே நாம் பயப்படக்கூடிய நிலையை உண்டாக்கக் கூடியது. விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், கடலிலிருந்தும் அன்னியர், எதிர்த்து அடிப்பர், விடுதலைப்போரின் மற்றோர் கட்டத்தின் போது, மறைந்தவரின் மனக்கண்முன் தோன்றிய நாடு உருவாவதற்காக நடத்தப்படும் விடுதலைப் போரின் போது, அன்னியரிடமிருந்தல்ல, நம்மவரிடமிருந்தே, விண், மண், கடல் எனும் இடங்களிலிருந்து மட்டுமல்ல, நம் ஒவ்வொருவர் மனதிலேயே இருந்துங்கூட, சந்தே