பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக் கியம் நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம். -ஜப்பான் ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமண ம் தான். -துருக்கி முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை,_அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை. -ஜெர்மனி மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும். -ஜெர்மனி இரவில் ஒர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை. -இங்கிலாந்து சூரியன் போகாத இடத்திற்கு ைவத்தியர் போகிரு.ர். -இத்தாலி செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால், அதுவே பாதி நோயாகும். -இத்தாலி உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான். -துருக்கி ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப் பதைவிட மேலானது. ஸ்பெயின் இரவுச் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம். -லத்தீன் நன்ருயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும். -ஜெர்மனி உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்துகொள். -ஜெர்மனி ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு. -ஃபின்லந்து ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்ருல், எல்லாமும் குறைவு என்று பொருள். -ஃபின்லந்து