பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இருபதில் அழகன், முப்புதில் பலசாலி, நாற்பதில் செல்வந்தன். ஐம்பதில் அறிவாளி என்றில்லாதவன், பின்னல் அவ்வாறு ஆக முடியாது. -ஸெக் எல்லாவற்றையும் தராசில் நிறுக்க முடியாது. -டென்மார்க் இறக்கிறவர்கள் உள்ள இடத்திலேயே வாரிசுகளும் இருக் கிருர்கள். -எஸ்டோனியா உனக்கு மேலானவரிடமிருந்து ஒதுங்கியிரு. -கிரீஸ் வைத்தியர்கள், மூடர்கள், உபதேசம் செய்பவர்கள்; இந்தத் தொழில் பார்ப்பவர்களே அதிகம். -ஹங்கேரி முன்னேருதவன் பின்னேறுகிருன். -லத்தீன் வயிறு நிறைந்தவனும் பட்டினி கிடப்பவனும் ஒரே பாட்டைத் தான் பாடுகிருர்கள். -நார்வே வானம் என்னைப் படைத்தது. பூமி என்னைத் தாங்கு தெரிந்ததை யெல்லாம் சொல்லாதே. கேட்டதையெல்லாம் நம்பாதே, முடிந்ததை யெல்லாம் செய்யாதே. -போர்ச்சுகல் பாதி உலகம் துள்ளுகின்றது. பாதி அழுகின்றது. -ரஷ்யா வீடுதோறும் புகைக் கூண்டு கறுப்பாய்த்தான் இருக்கும். -செர்பியா ஒவ்வொரு கிராமமும் தன் பாட்டையே பாடுகின்றது. -( ' ) உலகத்தின் இயல்பு இப்படி யிருக்கிறது; பணம் ஒருவன் கையில், பை மற்ருெருவன் கையில். -சைலீஷியா வக்கீலிடம் பற்று அதிகமானல் செல்வம் குறைந்துவிடும்: வைத்தியரிடம் பற்று அதிகமானல் ஆரோக்கியம் குறைந்துவிடும்; பாதிரியாரிடம் பற்று அதிகமால்ை கெளரவம் குறைந்துவிடும். -ஸ்பெயின் வெய்யிலும், துக்கங்களும், விருந்துகளும் சவக்குழிகளை நிரப்பு பலர் முகர்ந்த ரோஜாவில் மணம் இராது. -ஸ்பெயின்