பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 ஏழைகளுக்கு எப்பொழுதும் இருள்தான். எப்பொழுதும் மாரிக்கால ம்தான். -போலந்து தேவைக்குமேல் இருப்பதும் ஏழைமைதான். -இங்கிலாந்து பைெயத் தேடி அலைவதைவிட உணவைத்தேடி அலைவது மேல். -அயர்லந்து பறவைக்குத் தான் எவ்வளவு ஏழை என்பது தெரிந்தால், அது இனிமையாகப் பாடாது. -டென்மார்க் செம்புதான் ஏழைகளின் தங்கம். -எஸ்டோனியா ஏழைகளே செல்வர்களுக்கு உணவளிக்கிரு.ர்கள். —(?” ) வெறும் பாதங்களுக்கு எந்தச் செருப்பும் சேரும். —(?” ) உணவு வேகும்வரை ஏழைகளுக்குப் பொறுமை யிருக்கும்; வெந்தது ஆறும்வரை இராது. -ஃபின்லந்து பணக்காரன் பிணி ஊரெல்லாம் தெரியும், ஏழை இறந்தா லும் எவருக்கும் தெரியாது. -ஃபின்லந்து சொத்தை இழந்துவிட்ட யூதன் பழங் கணக்கைப் பார்ப் பான். == -கிரீஸ் சிறைச்சாலையும், லென்ட் நோன்பும் ஏழைகளுக்காக ஏற்பட்டவை. -ஸ்பெயின் (லென்ட் நோன்பு நாட்களில் கிறிஸ்தவர்கள் உபவாச மிருந்து, பிரார்த்தனை செய்வது வழக்கம். ) ஏழைக்குத் தான் பணக்காரகைலாம் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே யிருக்கும்; செல்வனுக்குத் தான் ஏழையாகி விடக்கூடும் என்ற அச்சம் இருந்துகொண்டே யிருக்கும். -அமெரிக்கா பணக்காரனுக்கு ஐந்து புலன்கள், ஏழைக்கு ஆறு. -சுவீடன் பணமில்லாவிட்டால் உறவில்லை. -யூதர்