பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மகிழ்ச்சியான இதயமுள்ளவன் இடைவிடாத விருந்தைப் பெற்றவனவான். -பழைய ஏற்பாடு அழுகை ஓர் இரவு நிலைத்திருக்கும், காலையில் இன்பம் வரும். -பழைய ஏற்பாடு எல்லோரும் இன்புற்றிருந்தாலன்றி, ஒருவன் முற்றிலும் இனபமாயிருக்க இயலாது. -ஸ்பென்ஸர் செல்வத்தை உண்டாக்காமல் அதை அநுபவிக்கவும், (பிறருக்கு) இன்பத்தை உண்டாக்காமல் இன்பம் துய்க்கவும் நமக்கு உரிமையில்லை. -பெர்னர்டு :ைா சுகம் வந்தால் உடல் பருத்துவிடுகின்றது. -இந்தியா சிரித்துக்கொண்டே வேலையை முடிக்கலாம், அழுது கொண்டிருந்தால், அழுகையின் பலன்தான் கிடைக்கும். -இந்தியா ஆட்டு மந்தையின் அடித்துரசு ஒநாயின் கண்ணுக்கு இனிமை யாகும். -பாரசீகம் தான் இன்பமாயிருப்பதாக எண்ணுபவனே மகிழ்ச்சியுள்ளவன். -ஃபிரான்ஸ் மகிழ்ச்சியும் வீரமும் முகத்திற்கு அழகு. -ஃபிரான்ஸ் சிரிக்காத நாள் வீணய்ப்போன நாள். -ஃபிரான்ஸ் மகிழ்ச்சியால் மாள்பவர் இல்லை. -எஸ்டோனியா ஒருவன் சிரிக்கும் போதெல்லாம் மரணம் ஒத்திப்போடப் பெறுகின்றது. -இத்தாலி கொடுப்பதானல் கஷ்டமில்லாமல் கொடுத்துவிடு; பெறுவ தானல் சந்தோஷத்துடன் பெற்றுக்கொள். -ஹங்கேரி பேராசை தீர்ந்ததும் மகிழ்ச்சி தொடங்கும். -ஹங்கேரி பொறுமை யில்லாமல் மகிழ்ச்சியில்லை. -ரவி:யா வெங்காயம் கிடைத்ததற்கு ஒருவன் துள்ளிக் குதித்தால், வெல்லம் கிடைத்தால் என்ன செய்வானே? -அரேபியா

ை சயின் இனிப்பு மகிழ்ச்சியோடி ருத்தல். - ஜெர்மனி