பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 எனக்குத் தெரியாத விஷயம் எதுவும் என்னைத் தொல்லைப் படுத்துவதில்லை. -யூதர் கவலைகளால் துடிதுடித்தால், தலைதான் நரைக்கும். -இங்கிலாந்து கவலை பரிகாரமன்று. -இங்கிலாந்து பின்னல் வரப்போகும் துன்பத்திற்கு இப்பொழுது நாம் செலுத்தும் வட்டி கவலை. -இங்கிலாந்து பிறர் கவலை உன் துரக்கத்தைக் கெடுக்காது. -யூதர் துக்கம் பிறருக்குக் காட்டிக் கொள்ளாமல் வருந்துவோனே உண்மையாகத் துக்கப்படுபவன். -லத்தீன் துக்கத்தைக் கண்ணிர் கரைக்கின்றது. -லத்தீன் சாதாரணத் துக்கங்களை வெளியிட முடியும்; பெருந் துக்கங் களால் வாயடைத்துப் போகும். -லத்தீன் அடக்கிய துக்கம் மூச்சை யடைக்கும். -லத்தீன் காலத்தால் குறையாத துக்கம் எதுவுமில்லை. -லத்தீன் ஒருவன் தன் துக்கத்தை மறைத்துக் கொண்டால், அதற்கு' பரிகாரம் கிடையாமற் போகும். -துருக வயிறு காயாமலிருந்தால், எந்தத் துக்கமும் குறைவாகத் தோன்றும். -இங்கிலாந்து துக்கத்தை வெளியே சொன்னல், சிறிது குறையும். —( ** புதிய துக்கம் பழையதை நினைவுக்குக் கொண்டுவரும். -( ' ) துக்கத்திற்கு ஒரே மருந்து வேலைதான். -இங்கிலாந்து கணவன் இல்லையே என்று விதவை அழுகிருள், கணவன் இருக்கிருனே என்று சுமங்கிலி அழுகிருள், இருவரோடும் சேர்ந்து கன்னியும் அழுகிருள். -இந்தியா ஏக்கம் முதலில் மனத்தை முடமாக்கி, பிறகு உடலை வதைக் கின்றது. -இந்தியா