பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 அழுத கண்களை உடையவனுக்கே கண்ணிரின் பாஷை புரியும். -இந்தியா துக்கமெல்லாம் முட்டளவுக்கு மேல் ஏருமல் பார்த்துக் கொள்ளவேண்டும். –6ుLér சோகம் ஒரு மேகம் போன்றது; கனமானல் விழுந்து விடும். o -ஆப்பிரிக்கா சோகம் ஒரு பொக்கிஷம் போன்றது: நண்பர்களுக்கே அதைக் காட்டுவார்கள். -ஆப்பிரிக்கா நம் வேதனையை எவர் காதிலாவது போட்டு வைக்கா விட்டால், அது கூடுதலாகும். -போலந்து ஒருமாத இன்பத்தைவிட ஒரு நாள் துக்கம் நெடியது. -சீன ஒரு துக்கத்தை இரண்டாக்கிக் கொள்ள வேண்டாம். -இங்கிலாந்து துக்கம் பாவத்தின் முதற் குழந்தை. -இங்கிலாந்து இப்பொழுதுள்ள இன்பத்தில் பழைய துக்கங்களை நினைத்துக் கொண்டால் இன்பமாயிருக்கும். -இங்கிலாந்து சுறுசுறுப்பான தேனிக்குத் துக்கப்பட நேரமில்லை —(?” ) துக்கப்படுவோர் இருவர் சேர்ந்தால் துக்கம் குறையும். -( ' ) துக்கத்தை இழந்தவன் நிறைந்த லாபத்தை அடைந்தவன். -ஃபிரான்ஸ் விதியால் வந்த துக்கத்தை வார்த்தைகளால் குறைத்துக் கொள்ளலாம். -லத்தீன் துக்கமில்லாத நாளேயில்லை. -லத்தி இ. அற்பமான துக்கங்கள் வாய்விட்டுப் பேசும்; பெருந்துக்கங்கள் மெளனமாயிருக்கும். -லத்தீன் துக்கத்தைப் பாடித் தள்ளுங்கள். -ஸ்பெயின் மற்ருெருவன் துயரத்தில் நீ மகிழ வேண்டாம். -துருக்கி சிலருடைய சிரிப்பில் கண்ணிரின் மணம் கலந்திருக்கும். -ரஷ்யா