பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

தெய்வத்தையே எதிர்ப்பவன் வேறு எவரிடத்தில் பிரார்த்தனை செய்ய முடியும்? - கன்பூஷியஸ் சுவர்க்கம் என்பது இறைவனுடன் ஒன்றி நிற்றல். - ( ” )

கடவுள் உனக்கு நிறைய ஆடுகளைக் கொடுப்பார்; ஆனால், நீதான் மந்தையைக் காத்துக்கொள்ள வேண்டும்.

-அல்பேனியா

மீனுக்கு ஏரியின் அடித்தளம் தெரியும்; ஆண்டவனுக்குக் கடலின் அடித்தளம் தெரியும். - ஃபின்லாந்து ஒரே கடவுள், ஒரே சட்டை , ஒரே மனைவி. - ஜெர்மனி மனைவியர் நல்லவரா யிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார். - ஜியார்ஜியா கடுமையான நோயில் கடவுள்தாம் மருத்துவர். - ஹங்கேரி கடவுளை ஏமாற்ற எண்ணுபவன் முன்பே தன்னை ஏமாற்றிக் கொண்டு விட்டான். - இத்தாலி கடவுள் அருளிருந்தால், சிலந்தி வலையே சுவராகும்; இல்லையானால், சுவரும் சிலந்தி வலையாகும். - இத்தாலி

ஒவ்வொரு நாளும் திருடனுக்குச் சயித்தான் உதவி செய்கிறான்; ஒரு நாள் கடவுள் காவற்காரனுக்கு உதவி செய்வார்.

-நீகிரோ

இறைவன் எறும்பை அழிக்க நினைத்தால், அதற்குச் சிறகுகளை அளிப்பான். - பாரசீகம் நெருக்கடி நேரும்போது ஒருவன் முதலில் கடவுளிடம் திரும்புகிறான், பிறகு யூதனிடம் (லேவாதேவிக்காரனிடம்) திரும்புகிறான். - போலந்து ஒருவனுடைய உடல் ஜார் சக்கரவர்த்தியின் உடைமை, ஆன்மா ஆண்டவனுடையது. முதுகு பண்ணையாருடையது. - ரஷ்யா

கடவுளின் கால்களைப் பிடி, சயித்தானின் கொம்புகளைப் பிடி.

-ரஷ்யா