பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

ஆண்டவனிடத்தில் நீ அன்பு செலுத்தினால், அவனுக்கு நீ அஞ்ச முடியாது; நீ அஞ்சினால், அன்பு செலுத்த முடியாது. -செர்பியா கடவுளின் தொழுவில் எல்லாவிதமான கால்நடைகளும் உண்டு. -செர்பியா சிறு வீட்டில் கடவுளுக்கு ஒரு மூலையில் இடமிருக்கிறது. பெரிய வீட்டில் அவர் நடுக்கூடத்தில் நிற்கவேண்டியிருக்கிறது. -சுவீடன் ஒவ்வொரு நாளும் தன் ரொட்டித் துண்டைக் கொண்டு வருகின்றது. -ஆப்பிரிக்கா புலியைப் படைத்ததற்காகக் கடவுளை நோக வேண்டாம்; அதற்குச் சிறகுகள் அளிக்காததற்காக நன்றி கூறுங்கள்.

-ஆப்பிரிக்கா

எல்லாத் துன்பங்களுக்கும் மருந்து ஆண்டவன்தான். -( ” ) கடவுள் முக்காலத்திற்கு அப்பாலும் இருப்பார். -ஆப்பிரிக்கா

நாளைக்காகச் சேர்த்து வைப்பவன் கடவுளிடத்தில் நம்பிக்கையில்லாதவன்.

-சிலீ

கடவுள் ஒருவரேயாயினும் பல பெயர்களைப் பெற்றிருக்கிறார்.

-கிரீஸ்

சத்தியமே கடவுள், ஒளி அவர் நிழல்.

- பிளேட்டோ கடவுள் விரும்பாவிட்டால்,தெய்வீக ஞானிகளாலும் முடியாமற் போகும். -இத்தாலி கடவுள் பொறுமையோடு இருக்கிறார், ஏனெனில் அவர் நித்தியமானவர். -அகஸ்டின் கடவுளின் அனுமதியில்லாமல் நாம் எதையும் செய்வதில்லை. -லத்தீன் கடவுள் இருப்பதால் நாம் இருக்கிறோம். - சுவீடன்பர்க்