பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அநேகமாக எல்லா மனிதர்களும் மூடர்களே. -லத்தீன் பல விஷயங்களில் அறியாமை நலம். -லத்தீன் நெருப்பிலே விழுந்த மூடன் வெளியே வந்து விழுதல் அபூர்வம். -அரேபியா வாயை மூடிக் கொண்டிருக்கும்வரை மூடனும் மற்ற மனிதர் களைப் போலவே யிருப்பான். -டென்மார்க் மூடனுக்கும் தன்னைப் போற்றும் பெரிய மூடன் கிடைத்து விடுகிருன். == -ஃபிரான்ஸ் எல்லோரும் மூடர்களானல், நீ மட்டும் அறிவாளியாயிராதே. -ஃபிரான்ஸ் மூடர்கள் விஷயம் கடவுளுக்கு மட்டுமே புரியம். —( " ) ஆதாம் காலத்திலிருந்து மூடர்களே பெரும்பான்மையோர். -ஃபிரான்ஸ் மழைக்கு அஞ்சி நீரிலே குதித்தல் மடமை. -ஃபிரான்ஸ் அறியாமையும் செருக்கும் கைகோர்த்து உலாவும். -யூதர் மூடனிடம் முத்தம் பெறுவதைக் காட்டிலும், அறிவாளியிடம் அடி வாங்குதல் மேல். -யூதர் படிப்பில்லாதவன் இருளிலே நடப்பவன். - -சீன அறிவின்மை கேவலம், அதைவிடக் கேவலம் அறிய மன மில்லாமை. -சீன இந்த உலகில் வெற்றிபெற ஒருவன் முடனைப் போன்ற தோற்றத்துடன், அறிவாளியாயிருக்க வேண்டும். -மான்டெஸ்கியு அறியாமையைத் தவிர அடிமைத்தனம் வேறில்லை. -இங்கர்ஸால் கல்லாதிருத்தலைவிடப் பிறவாதிருத்தல் மேல். -பிளேட்டோ கொதிக்கிற சட்டியிலிருந்து நெருப்பில் விழுதல். -டெர்டுல்லியன் கரடிக்கு அஞ்சி ஒருவன் ஒநாய்களிடம் ஒடுகிருன். -ரவி, யா அறியாமை என்பது அந்தகாரம், -சிக்கியர்