பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 பழைய பழமொழிகள் உண்மையின் குழந்தைகள். -ஸ்காட்லந்து தினசரி அநுபவத்தின் பெண்கள் பழமொழிகள். -ஹாலந்து பழமொழியில் தங்கம் நிறைந்துள்ளது. -எஸ்டோனியா பழமொழி சிந்தனையின் திறவுகோல். -எஸ்டோனியா பழமொழியால் திருடனும் அறிவாளியாவான். -ஃபிரான்ஸ் நல்ல நினைவிலிருப்பதற்காகவே பழமொழி அமைந்துள்ளது. -ஃபிரான்ஸ் பழமொழிகள் வண்ணத்திச் பூச்சிகள்; சிலவற்றைப் பிடித்துக் கொள்கிருேம், சில பறந்தோடி விடுகின்றன. -ஜெர்மனி அநுபவத்திலேயே பொருள் விளங்கும்படி அமைந்தவை பழமொழிகள். -ஜெர்மனி பழமொழி எந்த மொழியில் எழுதப் பெற்றிருந்தாலும், அதன் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் வரவேற்கத் தக்கது. -மாக்ஸ் முல்லர் சிதைந்து அழிந்துபோன பழைய தத்துவ ஞானத்தில் எஞ்சி ற்பவை பழமொழிகள்; அவைகள் சுருக்கமாகவும் உண்மையாகவும் இருப்பதால் பாதுகாக்கப் பெற்றுள்ளன. -அரிஸ்டாட்டல் பழைய பழமொழிகள் வெளியே எங்கும் பரவியுள்ளன. -ஜஸ்லந்து பழமொழிகள் வீண் வார்த்தைகள் அல்ல. -போலந்து பழமொழிகள் மக்கள் புழங்கும் நாணயங்கள். -ரஷ்யா பழமொழிகள் மக்களின் அறிவு. == -ரவியா பழமொழி அறிவிலிருந்து வருகிறது, அறிவு பழமொழியி லிருந்து வருகிறது. -ரவியா பழமொழிகள் குட்டிச் சுவிசேடங்கள். -ஸ்பெயின் மனிதன் நினைப்பதைப் பழமொழி கூறுகின்றது. -ஸ்பெயின் சிறு பழமொழியிலிருந்து பெரிய ஆறுதல் கிடைக்கும். -ஸ்விட்ஸர்லநது அழகான பழமொழி பையிலுள்ள தங்க நாணயம் போன்றது. -ஸ்விட்ஸர்லந்து