பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நல்ல புத்தகம் நல்ல நண்பன். -இத்தாலி கெட்ட புத்தகம் திருடனைவிட மோசம். -இத்தாலி இலக்கியமில்லாத வாழ்க்கை மரணமாகும். -லத்தின் ஆசிரியர் ஒருநாள் எனக்கு ஆசிரியராயிருந்தவர் வாழ்வு முழுதும் என் தந்தையாவார். -சீன தந்தை என்ற பெயருக்குக் கல்வி கற்பிப்பவரே தந்தையைவிட அதிக உரிமையுள்ளவர். -Աե.5fi பெற்ற அறிவைப் பேணி, புது அறிவைப் பெறுபவனே ஆசிரியன். -கன்ஃபூவியஸ் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியன் அவர்களைவிட அதிகமாய்த் தெரிந்து கொள்கிருன். -ஜெர்மனி தெய்வங்கள் ஒருவனை வெறுத்தால், அவன் ஆசிரியளுவான். -லத்தீன் சொல்லிக்கொடுப்பவன் அதனல் தானும் கற்கிருன். -( ' ) கற்பனை நீரிலே வானத்தைப் பார்ப்பவன் மரங்களிலே மீன்களைப் பார்ப்பான். -சீன உரையாடல் மனிதனின் உரையாடலே அவனுடைய சிந்தனைகளுக்குக் கண்ணுடி. -சீன பலர் விவாதம் செய்ய முடியும், சிலரே உரையாடமுடியும். -இங்கிலாந்து உரையாடாதவனுக்கு ஒன்றுமே தெரியாது. -இங்கிலாந்து