பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயலறி வு முன்னல் ஆற்றைக் கடந்தவனுக்கே நீரின் ஆழம் நன்ருய்த் தெரியும். -டென்மார்க் கட்டிக் கொடுத்த சோறும், கற்றுக் கொடுத்த சொல்லும் நீடித்து நில்லா. -தமிழ்நாடு அநுபவம் சிந்தனையின் குழந்தை; சிந்தனை செயலின் குழந்தை. -இங்கிலாந்து அநுபவமும், நினைவும் அறிவுக்குத் தந்தையும் தாயும். -இங்கிலாந்து இரண்டு முறை கப்பலுடைந்து கஷ்டப்பட்டவன்- கடலிடம் கோபிப்பது வீணுகும். -இங்கிலாந்து அநுபவத்தால் பெறும் அறிவுக்கு அதிக விலை. -இங்கிலாந்து பழைய எலிக்குப் பழைய பூனையை விடு. -கிரீஸ் ஒவ்வெருவனும் தன் அநுபவத்தைத் தவிர, மற்றதை நம்பு தில்லை. -கிரீஸ் கிணற்றுத் தவளைக்குப் பெரிய கடலைப் பற்றி ஒன்றும் தெரியாது. -ஜப்பான் மூடர்களுக்கு அநுபவமே ஆசிரியன். -லத்தீன் க வ னிப் பு நல்ல இலாயங்களால் குதிரை நல்லதாகாது கவனம் வேண்டும். -- -டென்மார்க் தொட்டி நீரைக் கொட்டும் பொழுது, குழந்தையையும் எறிந்து விடாதே. -டென்மார்க் கவனமில்லாத காவல் கவனமுள்ள பகைவனை அழைக்கும். -இங்கிலாந்து முன்னல் பார்க்காதவன் பின்னல்தான் இருப்பான். ー( “”) குதிரை களவு போகும் முன்னல், இலாயத்தைப் பூட்டு. —(?” )