பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 கவனமில்லாதவன் கதவை அடைக்கும்பொழுது ஒர் அங்குலம் திறந்தபடி விடுகிருன்; சோம்பேறி மூன்று அங்குலம் விடுகிருன்; மூடன் முழுதும் திறந்தபடி விடுகிருன். -ஜப்பான் வீட்டின் தளத்தை உயர்த்தினால், கூரை தணிவாகிவிடு ம. -Աե.5rՒ சுண்டெலி திருடனன்று, வளைதான் திருடன். (வளையை அடையாமல் வைத்திருந்தால், எலிகள் வரத் தான் செய்யும்.) -யூதர் கண்ணுள்ளவர்களைப் பார்க்கிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுவான். -ஜெர்மனி இரும்புப் பெட்டி திறந்து கிடந்தால், துறவிக்கும் ஆசை உண்டாகும். -ஜெர்மனி விளக்கை உயரே வைத்தால் காற்று அணைக்கும்: ழே வைத்தால் குழந்தைகள் அணைககும். -ஜெர்மனி மூடிய பாலில் ஈ விழாது. -அல்பேனியா தொலைத் துவிட்டுத் தேடுவதைப் பார்க்கிலும், கவனமாய் வைத்திருப்பது எளிதாகும். -வேல்ஸ் ஒவ்வொரு படுக்கையையும் யே அதில் படுத்துக்கொள்வது போல் எண்ணி விரிக்கவேண்டும். -பல்கேரியா மரத்தைப் பார்த்துவிட்டு நிழலுக்கு ஒதுங்கு. -பல்கேரியா வண்டியிலிருப்பவர்கள் பேசினலும், வண்டிக்காரன் வண்டியை மட்டும் ஒட்டவேண்டும். -ஃபின்லந்து உன்னிடம் ஒரு கயிறு இருந்தால், அதைக் சுருட்டி வைக்கவும். -கிரீஸ் மாடு தொலைந்தவனுக்கு மணி ஓசை கேட்டுக்கொண்டே யிருக்கும். -ஸ்பெயின் ஒன்பது தடவை அளந்து ஒருமுறை கத்தரி. -பல்கேரியா மலரைப் பாதுகாத்தால் கனி கிடைக்கும். -பல்கேரியா வேலியில்லாத தோட்டம் வேலியுள்ள பாலைவனம் போன்றது. -பல்கேரியா