பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 மெளனமாயிருந்து மூடனென்று கருதப்படுவது, வாய்விட்டுப் பேசிச் சந்தேகமில்லாமல் அப்படித்தான் என்று காட்டிக் கொள்வதைவிட மேலாகும். -லிங்கன் எப்பொழுது நாவை அடக்கிக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்தவன் மூடனல்லன். -இங்கிலாந்து பேசுவதற்கு ஒரு நேரமுண்டு, மெளனமா யிருப்பதற்கும் ஒரு நேரமுண்டு. -காக்ஸ்டன் சொல்வதற்கு உன்னிடம் விஷயமில்லாத பொழுது, எதுவும் பேசாதே. -இங்கிலாந்து உன்னைப் பற்றி மக்கள்,பெருமையாக எண்ணவேண்டு மென்று விரும்புகிருயா? அப்படியானல், பேசாமலிரு. -ஃபிரான்ஸ் மனிதர்கள் பேசுவதற்குத் திறமையில்லாமலும், பேசாமலிருப் பதற்கு நிதானமில்லாமலும் இருக்கும்பொழுது, பரிதாப மாயிருக்கிறது. -ஃபிரான்ஸ் பேச்சு வெள்ளி, மெளனம் தங்கம், -ஃபிரான்ஸ் மெளனத்திற்கு நிகரான ஞானமில்லை. -கிரிஸ் மெளனம்தான் மனிதன் கற்கும் முக்கியமான பாடம். -கிரீஸ் அமைதியான நாயிடத்தும், அசைவில்லாத நீரிடத்தும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். -லத்தீன் நீ அமைதியோடு வாழ விரும்பினால் கேள், பார், மெளன மாயிரு. -லத்தீன் மூடன் வாயை மூடிக்கொண்டிருந்தால், ஞானியாகக் கருதப் படுவான். -லத்தீன் பேச்சு சொற்களை எண்ணக் கூடாது, எடைபோட்டுப் பார்க்க வேண்டும். -போலந்து மனிதரில் நாவிதனும், பறவைகளில் காகமும் வாயாடிகள். -இந்தியா வழியைக் கேட்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை. -சீன