பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - லை. જ ૧ર பண்புகள், காற்று, நீர், மண் ஆகியவற்றுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. * - - - - - - காற்று : நான்காவது பகுதி, ஒவாமல் வண்கால் பரந்து சலித்துத் திரட்டும்’ என்பதாகும். வண் கால் என்றால், வனமான காற்று; ஒவாமல் என்றால், ஒழியாமல் நீங் காமல் - இடைவிடாமல் என்று பொருளாம்.--பரந்து என்றால், எங்கும்-எல்லாவிடத்தும் பரவி என்று பொரு வாம். சலித்த ல் என்பதற்கு, அசைதல் - இயங்குதல் - வீசுதல் என்பது பொருளாம். திரட்டுதல் என்றால், ஒன்று கூட்டுதல் - குவித்தல் - தொடுத்தல் - கலத்தல் என்று பொருளாம். கால் ஒவாமல் பரந்து சலிக்கும். என்பதற்கு, காற்று இடைவிடாமல் எங்கும் பரவி இயங்கும்-என்பது பொருள். பூமிக்கு மேல் குறிப்பிட்ட தொலைவு வரையிலும் காற்று மண்டலம் உள்ளது; அதற்கும் மேலேதான் விண்வெளி தொடங்குகிறது-என்னும் செய்தி முன்னரே தரப்பட்டுள்ளது. பூமியைச் சுற்றிக் காற்று எங்கும் இடைவிடாமல் பரவி உள்ளது. காற்று இல்லையேல் உயிர்வாழ முடியாது. நிலா உலகில் உயிர்கள் இல்லாமையை ஈண்டு நினைவுகூர வேண்டும். - :ர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம்" (18) என்பது புறநானுாற்றுப் பாடல் பகுதி. (பிண்டம் - உடம்பு) - 93 'மன் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே." (மணிமேகலை - பாத்திரம் பெற்ற கதை-95, 96) என்பது மணிமேகலைப் பாடல் பகுதி. இப்பாடல் பகுதி களால் உடம்பு வளர - உயிர் வாழ நீரும் உணவும் இன்றியமையாதவை என்பது பெறப்படும். ஆயினும், உணவு இன்றிப் பல நாள் உயிர் வாழலாம்; நீர் இல்லாமல் சில நாள் உயிர் வாழலாம்; ஆனால், காற்று இல்லாமல் ஒரு நாளும் உயிர் வாழ முடியாது. முனிவர் கள் சிலர், உணவும் நீரும் உட்கொள்ளாமல் காற்றை மட்டும் உட்கொண்டு வாழ்வார்களாம். இதனை, 'காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கங்தைசுற்றி ஒடே எடுத்தென்ன உள் ளன்பு இலாதவர்...' என்னும் பட்டினத்தாரின் பாடல்பகுதியால் அறியலாம் - - - யாரோ இரண்டொருவர், காற்றையும் உட்கொள் காம ல் , மூச்சை அடக்கிக் கொண்டு த்துக் குள்ளேயோ நீருக்குள்ளேயோ அமர்ந்து கடுந்த வ யோகம் புரிவதாகக் கூறுவதுண்டு. இது மிகவும் கடந்த நிலை: இங்கே இது நமக்கு வேண்டா. பூமியைச் சுற்றியுள்ள பகுதியில் காற்று இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் கையில் விசிறி கொண்டு முகத்துக்கு நேரே விசிறுவோமானால், விசிறி, முகத் துக்கு எதிரேயுள்ள காற்றை அப்புறப்படுத்துகிறது; அவ் வாறு அப்புறப்படுத்திய வெற்றிடத்தைப் புதுக் காற்று நிரப்புகிறது. அந்தப் புதுக் காற்றே நம் முகத்துக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. இந்த அமைப்பு நாடக அரங்கக் கட்டடத்திலும் இருப்பதுண்டு. உள்ளே அமர்ந்திருக்கும்