பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மக்கள் உயிர்ப்பதால் (சுவாசிப்பதால்) சூடாகும காற்று மேலே போய், பக்க வாட்டத்தில் உள்ள சுவரின் உயரே இருக்கும் கால் அதரின் (சன்னலின்) வழியாக வெளியேறவும், புதுக்காற்று வந்து அவ்விடத்தை நிரப்ப வும் விசிறி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஒரிடத்திலும் காற்று இல்லாதவாறு செய்ய முடியாது என அறியலாம். காற்று இல்லாதவாறு செய்யப்பட் டால் அங்கு உயிர் வாழ முடியாது. அங்கே காற்று கூட புகமுடியாது”, “காற்றுடநுழைய முடியாத இடத்திலும் அவன் நுழைந்து விடுவான்’-என்னும் உலகியல் மொழி கள், காற்று எங்கும் இருக்கும் என்பதை அறிவிக் கின்றன.

  • வளி வழங்கும் மல்லல்மா ஞாலம்'

என்பது திருக்குறள் பாடல் பகுதி வளி-காற்று: வழங் குதல்-இயங்குதல்; மல்லல் - வளம்; மா-பெரிய: சூாலம. மண்ணுலகம். மண்ணுலகில் காற்று இயங்கித் கொண்டேயிருக்கும் என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். வழங்குதல் என்பதற்கு இயங்குதல் என்ற்ே பழைய உரையாசிரியர் பரிமேலழகரும் பொருள் கூறியுள்ளார்.

  • -

- - - ---- - . ت: ، بَت صء -காற்று என்னும்டபொருளுடைய வாயு என்னும் க. ப.க.கிருதச் சொல்லுக்கு இயங்கிக் கொண்டே ாயிருப்பது என்பது பொருளாகும். சதா (எப்போதும்) இயங்கிக் கொண்டிருப்பது என்னும் பொருளில் சதா கதி' என்னும் பெயரும் காற்றுக்கு உண்டு. பாரதக் கதையில் வரும் வீமனைக், காற்றுக் கடவுளின் மகனாகக் கூறுதல் மரபு.

  • திருக்குறள்-துறவறம்-அருளுடைமை-(2451.

95 இதனை வில்லிபுத்துாரார் இயம், ய பாரதம் என்னும் நூலில் உள்ள - 'சயக்கரடம் உறுதறுகண் சயிலம் அன்ன சதாகதிமைந்தனும் இமைப்பில் தனிச் சென்றானே. (ஆரணிய பருவம்-முண்டகச் சருக்கம்-15) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். சண்டு, காற்று என்னும் பொருளில் சதாகதி" என்னும் சொல் ஆளப் பட்டிருப்பது காணலாம். சதா-எப்போதும்; கதி-இயங் குவது. சதாகதி மைந்தன்-காற்றின் (வாயு பகவானின்) மகனாகிய பீமன். தமிழில் உள்ள கால்வாய், கால்வழி, கால் முளை என்னும் சொல்லாட்சிகள், கால்’ என்னும் சொல்லுக்கு, தேங்கி நிற்காமல் தொடருதல்’ உண்மையைப் புலப்படுத்தும். காலுதல் என்றால் இயங்குதல். கால்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்தே ' காற்று’ என்னும் சொல் எழுந்தது எனலாம். 李子 >。 வது காறறு. காலுதல் என்பதற்குக் குதித்து ஓடுதல்' என்னும் பொருள் உள்ளமையை, என்னும் பொருள் 'விடர்கால் அருவி வியன்மலை மூழ்கி" என்னும் சிறுபாண் ஆற்றுப்படை நூலின் பாடல் பகுதி யால் (170) அறியலாம். கால் அருவி-குதித்து ஒடும் அருவி, என்பது பொருள். கால் கிளர்தல்’ என்பதற்கு இடுதல்'- திரிதல்' என்னும் பொருள் உள்ளமையை, 'கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண". என்னும் பெரும் பாண் ஆற்றுப்படை நூலின் பாடல் பகுதியால் (21-22) அறியலாம். கால் கிளர்ந்து திரிதல்