பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

கிறார்கள். சூரியனுடைய ஒளிக்கதிர் இவற்றின் மீது வீசவே என்ன ஆயிற்று?

புரொடோபிளாசம்' என்கிற உயிர்க் கஞ்சி எப்படி இருக்கிறதோ அந்த மாதிரி இந்த கோசர்வேட்டுகளும் ஆயின.

நாளடைவில் இந்தக் கோசர்வேட்டுகள் வளர்ந்தன. உயிர்ப்பாசி தோன்றியது.

இவ்விதம் ஓபரின் சொல்கிறார்.


27. ஆதிபகவன் முதற்றே உலகு

உயிர்ப் பாசி தோன்றியபின் என்ன ஆயிற்று? உயிர் இனத்தின் 'முன். தோன்றல்கள்' தோன்றின. உயிர் நூல் அறிஞர்கள் இந்த முன்தோன்றல்களுக்கு ஓர் அருமையான பெயர் கொடுத்திருக்கிறார்கள். 'புரொடோ சுவா' என்று பெயர். 'சுவா' என்றால் ஆதி. ஆகவே, 'புரோடோ சுவா' என்றால் ஆதி உயிர் இனம் என்று பொருள்.

இந்த ‘புரோடோ சுவா' விலிருந்துதான் உயிர் இனம் முழுதுமே தோன்றியது. நாமும் தோன்றினோம்.