பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

இவ்விதம் நிமிர்ந்து நின்ற இனமே மனித குலத்தின் முன் தோன்றல்.

ஆகவே, இந்த உலகமானது ஒரே நாளைய படைப்பு அன்று; ஒன்பது நாளைய படைப்பும் அன்று. காலப் போக்கில் மாறி மாறித் தோன்றியது ஆகும்.

முன்னூறு கோடி ஆண்டுகள் முன்பு தோன்றி மாறி மாறி இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.

உலகில் உள்ள உயிர் இனங்கள் திடீரென்று தோன்றவில்லை. ஒரு கரு உயிரிலிருந்து தோன்றி, மாறி, மாறி, பல கரு உயிர்களாகப் பரிணமித்திருக்கின்றன.

வெளித்தோற்றத்தில் பல் வேறு இனங்களாகத் தோன்றலாம். எனினும் உயிர்க் குலம் ஒன்றே. அதன் ஆதியும் ஒன்றே.

'காக்கைகள் கூவக் கலங்கினேன்' என்றும், "வாடிய பயிரைக் கண்டபோது உள நடுக்குற்றேன்" என்றும் அருளிய வடலூர் வள்ளலாரின் திருவாக்கை நோக்குக.