பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

இவ்வளவும் அடங்கப் பெற்றதுதான் கருவட்டம். அதன் அளவோ! மயிர் இழையில் பாதி!

இந்த மாதிரி கோடிக்கணக்கான கருவட்டங்கள் சேர்ந்து தான் மனிதனாக காட்சி தருகின்றன. மரமாகத் தோன்றுகின்றன; மாடாகத் தோன்றுகின்றன,

இதிலே அதிசயம் என்ன தெரியுமா? கருவட்டங்கள் எல்லாம் தனித்தனியே இயங்குகின்றன. அதாவது எப்படி?

நாம் உணவு கொள்கிறோம். ஜீரணம் செய்கிறோம். மூச்சு விடுகிறோம். இன விருத்தி செய்கிறோம். இயங்குகிறோம்.

இந்தக் காரியங்களை எல்லாம் கருவட்டங்களும் செய்கின்றன.

ஒரு விளையாட்டு மைதானத்திலே ஆயிரக்கணக்கான பேர் நின்று 'டிரில்' செய்கிறார்களே! அந்த மாதிரி இந்தக் கோடிக் கணக்கான கருவட்டங்களும் செயல்புரிகின்றன. ஆகவே, நாம் செய்கிற செயல் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒவ்வொரு கருவட்டமும் புரியும் செயலாகும்.