பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

நூல் இழை மாதிரி ஏதோ ஒன்று ஜோடி ஜோடியாக இருப்பது தெரிகிறது. இந்த ஜோடிக்கு என்ன பெயர்?

'குரோமோசம்' என்று பெயர். இது கிரீக் சொல். 'குரோமோஸ்' என்றால் நிறம், வர்ணம் என்று பொருள் 'சோமோ' என்றால் உடம்பு.

மனிதருடைய கருவட்டம் ஒன்றிலே இந்த மாதிரி குரோமோசம் எவ்வளவு இருக்கின்றன? இருபத்து நாலு ஜோடி. சுண்டெலியின் உடம்பிலே இருக்கிற கருவட டத்திலே இருபது ஜோடி! ஈயின் கருவட்டம் ஒன்றிலே எட்டு ஜோடி.

இந்த மாதிரி ஜோடி ஜோடியாக 'குரோ மோசம்' உள்ள கருவட்டங்களுக்கு என்ன பெயர்? 'டிப்ளாயிட் செல்' என்று பெயர்.

‘டிப்ளூஸ்' என்றால் ஜோடி, ஜதை என்று பொருள்.

கருவட்டத்திலே நுண்கரு ஒன்று உண்டு. அதற்குள்ளேதான் குரோமோசம் இருக்கிறது. நுண்கருவைச் சுற்றி ஒருவித மான பசை போன்ற சஞ்சி. அதைச் சுற்றி வெங்காயத் தோல் போன்றதொரு ஜவ்வு.