பக்கம்:உலகு உய்ய.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உலகுக்கு ஒரே பொதுமொழி

உலகுக்கு ஒரே பொது மொழி போதும் என்பதே இந்தத் தலைப்பின் குறிக்கோள். இந்த இலக்கை அடைய, உலக மொழிகள் தோன்றிய - வரலாற்றுக்கு முற்பட்ட Lain Gol-á (pre-historical period) 5Tau35a)055: 5mlb பயணம் தொடங்க வேண்டும்.

கடவுள் தொடர்பு:

மொழிகளைக் கடவுளோடு தொடர்பு படுத்துவது ஒரு மரபாக உள்ளது. தமிழ் மொழியை முருகக்கடவுள் படைத்ததாகச் சொல்வதுண்டு. சிவனாகிய கடவுள் மதுரைத் தமிழ்க் கழகத்தில் புலவர்களோடு தாமும் ஒரு புலவரா யிருந்து தமிழ் ஆராய்ந்தார் என இலக்கியங்கள் கூறுகின்றன.

'சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும்

என் சிந்தை யுள்ளும் உறைவான் உயர் மதிற் கூடலின் ஆய்ந்த

ஒண் தீந் தமிழ்...”

என்பது, மாணிக்க வாசகர் அருளிய திருக் கோவையார் என்னும் நூலின் பாடல் (20) பகுதியாகும்.

'கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தவிப் பசுந் தமிழ்...” (திருவிளையாடல் -- திரு நாட்டுப் படலம் (57)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/219&oldid=544875" இலிருந்து மீள்விக்கப்பட்டது