பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன் மனம்

“உலகப் பேரொளி” என்று அன்றும் என்றும் சரித்திரத்தின் ஏடுகள் புகழ்த் துதி பாடிக் கெளரவம் செய்து வரும் அந்தத் தன்னிகரற்ற பெருமைக்கு இலக்கானவர் அல்லவா அண்ணல் காந்தி அடிகள்!

ஒரு நாள்:

அப்போது, ஹரிஜன முன்னேற்றம் சம்பந்தமாக எழுந்த பிரச்னை ஒன்றிற்குத் தீர்வு காண வேண்டி காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

சிக்கல் தீரும் கட்டம் நெருங்கியது. உண்ணா நோன்பை முடிக்கும் முடிவை எடுத்தார் மகாத்மா. அவரது நெஞ்சில் இடம் பெற்றவன் சிறுவன் விட்டோபா.

அவன் ஒரு ஹரிஜனச் சிறுவன்.

“தம்பி! நீ கொண்டு வந்து கொடுக்கும் ஆரஞ்சுப் பழச் சாற்றைக் கொண்டுதான் நான் என்னுடைய உண்ணா விரதத்தை முடிக்க உத்தேசித்துள்ளேன்!” என்றார் காந்திஜி.

சிறுவனுக்குக் கண்கள் கசிந்தன-ஆனந்த மேலிட்டால்: காந்திஜியை வணங்கி விட்டு விடைபெற்றான் விட்டோபா.

இடையில் இருந்ததோ மூன்றே மூன்று நாட்கள் தாம்!

எப்படியோ பாடுபட்டு அவனல் நாலணாதான் சேர்க்க முடிந்தது. நாலணாவுக்கு எத்தனை ஆரஞ்சுப் பழங்கள் கிடைக்குமோ? -

அன்றுதான் காந்தியடிகள் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டிய தினம்.

கடை கடையாக ஓடினான் ஹரிஜனப் பையன்.

“ஒரு பழம் கூட நாலணாவுக்குக் கிடைக்காதப்பா!” இந்தப் பதில்தான் கடைகாரர்களிடமிருந்து வெளிவந்தது.

“நான் வாங்கிச் செல்லும் இந்த ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொண்டுதான் நம் மகாத்மா உண்ணாவிரதத்தை