பக்கம்:உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

முடிச்கப் போகிறார்கள்!” என்று அவன் சொன்ன உண்மையை அவர்கள் நம்பத் துணியவில்லை.

அழுதான்; துடித்தான், விட்டோபா.

நேரம் நெருங்கியது.

கடைசியில் மனம் இரங்கிய ஒரு கடைக்காரர் விற்காமல் கிடந்த மூன்று காய்ந்த ஆரஞ்சுப் பழங்களே நாலணாவுக்கு அவனிடம் நீட்டினார்.

சிறுவன் ஓடினான். விட்டோபாவுக்காகக் காத்திருந்தார் மகாத்மா.

அண்ணலின் பக்தர்கள் பையனைத் தேடிய தருணத்தில், பழங்களுடன் வந்து நின்றான் அந்த அனாதைச் சிறுவன்.

ஒரு வாய்க்குக் காணும்படியாகத் தேறிய அந்த ஆரஞ்சுப் பழச் சாற்றைக் கொண்டுதான் அடிகள் தம்முடைய உண்ணு விரதத்தை முடித்தார்.

பாக்கியவான் விட்டோபா!


“பண்டிட்ஜி”

உலகப் பேரறிவாளர் நேருஜி மறைவதற்குப் பத்துத் தினங்களுக்கு முன், வைஜயந்திமாலாவின் ‘சண்டாலிகா’ நாட்டிய நாடகத்தைப் பார்க்க தம் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டுடன் வந்திருந்தார்.

இடைவேளையின் போது, நேருஜி எழுந்து போய் விடுவாரென்று அறிந்து, வைஜயந்திமாலா நேருஜிக்கு நன்றி தெரிவிக்கச் சென்றார். “பண்டிட்ஜி, தாங்கள் வந்திருந்து என்னைக் கெளரவித்ததற்காக மிகுந்த நன்றி, இன்னும் இருபது, இருபத்தைந்து நிமிஷங்கள் தான் இருக்கிறது. கடைசி வரை இருந்து விட்டுப் போனால், அதை என் பாக்கியமாகக் கருதுவேன்!” என்றார்.

காருண்ய மிக்க நேருஜி கடைசி வரை இருந்து நிகழ்ச்சியை ரசித்தார்-தமது உடல் நலக் குறைவையும் மறந்து ரசித்தார்!

முதல் நிகழ்ச்சி

உலகத்தின் சரித்திரத்திலே ஒரு தேசத்தை ஆளும் பொறுப்புக்குத் தேர்வு பெற்ற பெருமைக்கு பெண்மணி தேர்ந்தெடுக்கப் பெற்ற நிகழ்ச்சி இந்தியத் துணைக் கண்டத்திலே தான் நிகழ்ந்தது.