பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

99

ஆர்வமாயிற்று. எவ்வளவோ படித்திருக்கிறோம். இதையுந் தான் படித்தால் என்ன? இப்படி நினைத்தனர் சிலர். கணவன் மனைவி கடைக்குப் போவார்கள். கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவனும், இவர்கள் இருவருக்கும் தெரியாமல் வேலைக்காரனும், இந்த மூன்று பேருக்கும் தெரியாமல் டிரைவரும் வாங்கிவிடுவார்கள். இப்படி இல்லாத இடமே இல்லாமல் எங்கும் நிறைந்து விட்டாள் நாநா.

அப்படித்தான் அதில் அவன் என்ன எழுதியிருந்தான். “விபச்சாரத்தை ஒழிக்காமல் விபச்சாரியை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள். பிச்சையை ஒழிக்காமல் எப்படி பிச்சைக்காரர்களை ஒழிக்கப் போகிறீர்கள். குற்றம் இருப்பதால் குற்றவாளி தோன்றுகிறான். நிம்மதியாக வாழமுடியாதவன் திருடனாகிறான். கொள்ளைக்காரனாகிறான், கொலைக்காரனாகிறான்.”

“விபச்சாரம் செய்தால்தான் வாழ்க்கை என்று ஒருத்தியை யாக்கிவிட்டு, அது ஒரு குற்றம் என்று சொல்வதில் பொருளில்லையே. முன்னே ஒழிக்கவேண்டியது விபச்சாரத்தையா, விபச்சாரியையா. அவளுக்கு நிரந்தரமான கணவன் யார்? அவள் உடலில் வனப்பு இருக்கின்ற வரையில் வாழ்ந்து அது முதுமையடைந்த பின் வீழ்ந்து போகின்ற வாழ்க்கை தானே அவர்கள் வாழ்க்கை. ஒரு விபச்சாரியைப் பார்த்து ‘யார்’ உன் கணவன் என்று கேட்டால், காசைக் கொண்டு வந்து காட்டினாளாம். இந்தக் கொடுமைகளுக்குகெல்லாம் யார் காரணம். நாட்டின் நல்லோரே, நமது சகோதரிகளின் நிலையை எண்ணித் துக்கப்படவேண்டும்” என்று கேட்டான். சிந்திக்கத் தெரிந்தவர்கள் சரி என்றனர். அன்புள்ளம் கொண்டோர், நாட்டின் மேல் படர்ந்திருக்கும் இந்த அவமான மேகத்தை ஒட்டியே தீரவேண்டுமென்றனர். தாயுள்ளம் துடித்தது. பிரெஞ்சு நாட்டில் மட்டிலுமல்லாமல் உலகின் பல பகுதிகளுக்கு நாநா சென்றது. உண்மையை ஒளிக்காமல் சொன்ன எழுத்து வேந்தன் எமிலிஜோலாவின் பேனாவுக்கு ஓர்