பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

105

யூதனாகப் பிறந்துவிட்டான் என்பது தவிர அவன் வகிக்கும் பொறுப்பில் எவ்வித தவறும் இதுவரை ஏற்பட்டதில்லை என்றே அவன் இராணுவ வரலாறு கூறுகிறது. அவனைப்போல் ஒரு பிரெஞ்சுப் பிறவி நமக்குக் கிடைப்பானாயின், அவனை இராணுவத் தலைவனாக ஏற்றுக்கொள்ளலாம் என்று நாம் நினைத்தால்கூட, ஏற்கெனவே தன் உயிரை திரணமாக மதித்து பீரங்கிகளின் எரிவாயின் முன் நின்ற ஒருவனைக் கண்ணியமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம். அதைவிட்டு, இப்படி வீண் பழி சுமத்தி, அவனை அவமானப்படுத்தி, தீராப்பழிக்கு ஆளாக்கி, திசை தெரியாத டெவில்ஸ் தீவில் விடவேண்டிய தில்லை.

ஒரு இராணுவத் தலைவன் செய்யும் சிறிய தீங்குகூட ஒரு நாட்டின் எல்லையையே மாற்றி, ஆள்பவரை மாற்றி, சட்ட திட்டங்களை மாற்றி, பொருளாதார சீர்குலைவைத் தந்துவிடும் என்பதை நாம் அறியாதவர்களல்ல. ஆனால், அத்தகு தீங்கை தளபதி டிரைபஸ் செய்தானா என்பதுதான் கேள்வி. எனக்குக் கிடைத்திருக்கின்ற ஆதாயங்கள்படி அவன் குற்றமற்றவன். அவனை விடுவிக்கப் புறப்பட்டுவிட்டேன். நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் பங்கு பெற்றிருக்கும் இளைஞர்களே! என்னோடு வாருங்கள்.” என்ற கடிதத்தை பிகாரோ பத்திரிக்கையில் எழுதினான். அவ்வளவுதான். வந்தது இராணுவத்திற்குக் கோபம். பிகாரோ பத்திரிக்கை அலுவலகம் தீக்கறையாக்கப்பட்டது. ஜோலா அடித்து தெருவில் வீசி எறியப்பட்டான். இரத்தக் காயங்களோடு உருள்கிறான், செசானே அவனைத் தூக்க வந்தான். அவனுக்கும் விழுந்தது அடி.

ஜோலா இப்படி அடிபட வேண்டிய தேவை என்ன? டிரைபஸ் யூதன். இவன் பிரெஞ்சுக்காரன். அவனுக்காக இவன் வாதாடுவானேன். ஏதோ உண்மையிருக்கவேண்டும். இப்படிப் பேசினர் பலர். இந்தத் தண்டனை போதாது. இன்னமும் வேண்டும். இப்படி பேசினர் யூத எதிர்ப்பு இயக்கத்தார்.

புண்கள் ஆறியவுடன் மீண்டும் போர்த்தொடுத்தான், இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்துகிறான் என்று இவன்

பூ.102 உ.-7