பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

உலகைத் திருத்திய


பெற்றாேர்களுடன் சில நாட்கள் தங்கிவிட்டு, முன்பிருந்த வறுமை வாழ்க்கையிலிருந்து அவர்களை மீட்டு மீண்டும் ஹவாய்க்குப் புறப்படும்போது, தன் தம்பியை தன்னோடு அனுப்புமாறு கேட்டான். ஒரு பிள்ளையாவது தங்களோடு இருக்கட்டுமே என்று கருதி முதலில் அனுப்ப மறுத்தவர்கள், பிறகு ஆமியின் இரண்டாவது வேண்டுகோள்படி கப்பலிலேற்றிவிட்டு, ஆமிக்கு தகவல் தந்துவிட்டார்கள். சன் கப்பலில் பயனம் செய்துகொண்டே அதன் எந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான். அப்போது இவனுக்கு வயது பதின் மூன்று. ஹனலூலு போய்ச் சேர்ந்த சன் தன் தமையனுக்கு உதவியாயிருந்தான். ஆமிக்கோ இவனை ஒரு ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துக் கல்வி கற்றுத் தந்தால் தன் தொழிலுக்கு உதவியாயிருக்குமென்று கருதி பக்கத்திலிருந்த அயாலோனி என்ற கல்லூரியில் சேர்த்துவிட்டான். அங்கும் சரி. இலங்கையிலும் சரி, கல்லூரி என்றால் பத்தாம் வகுப்பு வரைதான் இருக்கும்.

அங்கே ஆசிரியர்களின் அனைவரும் ஆங்கிலேயர்கள்-ஒரு வரைத் தவிர. அவர் ஹவாய்த் தீவைச் சேர்ந்த சாலமென் மஹிபூலா என்பவர்தான் தலைமை ஆசிரியர். கிருஸ்துவ தலைமைப் பாதிரியாரும் அவர்தான். அங்கு கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்கள் இவனுக்கு திகைப்பையுண்டாக்கிவிட்டது. எல்லாம் ஆங்கிலம்! வெகுவிரைவிலே ஆங்கிலம் பயின்று அந்த மொழியிலேயே, வரலாறு, கணிதம், பூகோளம் முதலியவற்றைப் படித்து முடித்தான். ஆசிரியர் இவனுடைய விடா முயற்சியைக் கண்டு பாராட்டினார்கள். இவன் படித்த பள்ளி கிருஸ்துவர்களுக்குச் சொந்தமானதாகையால்


(குறிப்பு : 1953ல் நான் இலங்கையில் ஆற்றிய பல சொற்பொழிவுகள் காலேஜ் - கல்லூரியில்தான் நடந்தது. அப்போதுதான் பத்தாம் வகுப்பு வரையிலும் இருக்கும் கல்விச்சாலைகளையும்கூட கல்லூரி என்றே அழைக்கிறார்கள் என்பது தெரிந்தது)