பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

117

பருவத்திலேயே இப்படி ஒரு துணிச்சல் ஏற்பட்டிருந்தது இவனுக்கு. சீனத்தில் அப்போது பெண்களின் பாதங்கள் குறுகியிருந்தால் பார்ப்பதற்கு அழகாயிருக்குமென்று கருதுவார்கள். அதன்படி இவனுடைய இளைய சகோதரின் பாதங்களை இறுக்கக் கட்டுகிறபோது கண்டிப்பான். இது இவன் சிறு வயதிலேயே புரட்சிக்காரன் என்பதைக் காட்டிற்று.

ஆசிரியர் பிரம்பால் அடித்துக்கொண்டே இருந்தார். இவன் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தான். பொதுவாகவே, சீனத்தின் தென்பகுதி வரண்ட பகுதி. எதுவும் சரியாக விளையாது. விளைந்தாலும் அடுத்த அறுவடை வரை குடும்பத்துக்குப் போதாது. இந்த நிலையில் அகப்பட்ட இவன் குடும்பத்தின் பெரிய பிள்ளை; வெளிநாடுகளிலாகிலும் போய்ப் பிழைக்கலாம் என்று கருதியிருந்தான்.

ஹவாய் தீவு

பசிபிக் மாகடலின் மத்தியில் பல தீவுகளுக்கிடையே இந்தத் தீவு அமெரிக்காவில் ஆதிக்கத்திலிருந்தது. ஹவாய் தீவுக்கூட்டங்களின் தலைநகரம் ஹனாலூலு. பெற்றாேர்களைப் பிறந்த இடத்திலே விட்டு ஹவாய்க்குப் போய் ஏதாவது சம்பாதித்தப் பணம் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு மூத்தவன் ஆமி புறப்பட்டு அங்கு போய்ச் சேர்ந்தான். அங்கே இந்தத் தீவுகளுக்கு முன்பு சேன்ட்விச் தீவுகள் (Sandwich Islands) என்று பெயர். இந்தத் தீவுகளில் பெரியது ஹவாய். ஆகையால் இப்போது அதை ஹாவாய் தீவுகள் என்று அழைக்கிறார்கள். தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 4000 சதுர மைல். இந்த இருபது தீவுகளில் சிலவற்றில் எரிமலைகள் இருக்கின்றன. ஹனலூலு அழகிய துறைமுகப் பட்டினம். இங்கு கரும்பு, வாழை, அன்னாசி, காபி முதலியன முக்கியமான விளைபொருள்கள்.

ஹவாய்க்குச் சென்ற ஆமி, சொந்தமாக நிலம் வாங்கிப் பயிரிடுகின்ற அளவுக்கு வளர்ந்துவிட்ட பிறகு, பெற்றாேர்களைப் பார்க்கவும், தம்பியை அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தோடும் ஊர் திரும்பினான்.