உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

உலகைத் திருத்திய


காரணம் சற்றாெப்ப இருநூற்றைம்பது ஆண்டுகள் மஞ்சு அரசாங்கம் நடைபெற்றது. சீனதிற்கு மஞ்சுக்கள் அந்நியர்கள். ஆனால் சொந்த நாட்டினரான சீனமக்களை அந்நிய நாட்டு அடிமைகள் போல் நடத்தினர் மஞ்சு அரசர்கள். அது எப்போது ஒழியும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்த மக்கள், அதை ஒழிக்கத் தோன்றிய ஒருவனை எப்படிக் காட்டிக் கொடுப்பார்கள்? அதனால்தான் மஞ்சு அரசாங்கத்தின் இந்தப் பயங்கரமான அறிவிப்பு பயன்பெறவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அந்த நடுக்கத்தைத் தந்த மாவீரன் சன்-யாட் சன்னைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

யாரை எதிர்த்துப் புரட்சி செய்தான்? 1908 முதல் 1912 வரை சீனத்தையாண்ட கடைசி மன்னர், மன்னன் பூயி என்ற மஞ்சு அரசனை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தப்போகும் இந்த மாவீரனின் இளமைப் பருவத்தைப் பற்றி தெரிந்து கொண்டு மேலே செல்வது நல்லது.

“ஆசிரியர் நிழலிலும் நடக்காதே” என்பது அன்றைய சீனத்தின் நடைமுறை. எவ்வளவு பெரிய மன்னர் மன்னர்களாயிருந்தாலும் ஆசிரியர்களுக்கு அவ்வளவு மரியாதை தந்தார்கள். இந்த நிலையில் இவன் தன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டான்: “ஆசிரியரே, நீங்கள் சொல்லிக்கொடுக்கும் பாடங்களில் எதையுமே நான் புரிந்து கொள்ள இயலவில்லை. பழைய புராணங்களையும், வெட்டி வேதாந்தங்களையும் சொல்லிக் கொடுப்பதால் என்ன பயன்?” என்று கேட்டு விட்டான். ஆசிரியர் திடுக்கிட்டார். ஏனெனில் இந்த விவாதம் ஆசிரியர் முன்னால் மாணவன் எவனும் கேட்டதில்லை; கேட்க முடியாது; கேட்கவும் கூடாது. ஊர் மக்கள் திடுக்கிட்டார்கள். ஒரு கூலியின் மகனா ஆசிரியரைப் பார்த்துக் கேட்டு விட்டான்? ஆசிரியர் தெய்வத்துக்கு சமமாயிற்றே! “எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது? “அட சண்டாளா, நீ ஒரு சாம்ராச்சிய மன்னன் மகனாயிருந்தால் கூட கேட்க முடியாதே. மன்னனே இப்படிச் செய்ய மாட்டானே. எவ்வளவு தைரியம் இந்தப் பையனுக்கு” என்று ஊரார் அனைவருமே வியந்தனர். மாணவப்