பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

121

சன்னும் ஊரைவிட்டு வெளியேறி ஹாங்காங் வந்து சேர்ந்தான். அங்கே ஒரு சிறிய பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படித்தான். பின்பு கிவீன்ஸ் கல்லூரியில் சேர்ந்துகொண்டான். ஹாக்கர் என்ற கிருஸ்தவரே முதல்வராக இருந்தார். அவருக்கு அறைகுறை சீனமொழி தெரியும். ஏனெனில் சீனமொழி கட்டாயப் பாடமாக்கப் பட்டிருந்தது. சன்னும் சீன மொழியில் தேர்ச்சிப் பெற்றவனாகையால் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியதன் விளைவாக, தன் பதினெட்டாவது வயதில் கிருஸ்தவனாக ஞானஸ்நானம் செய்து கொண்டான் சன்.

தந்தையின் பிரிவு

தந்தை இறந்துவிட்டதால் சன் ஊருக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. ஒருவர் இறந்தால் மூன்று திங்கள்கள் சடங்குகள் செய்ய வேண்டியிருப்பதால், ஆமி ஊருக்கு வரவில்லை. இவனே எல்லா சடங்குகளையும் செய்து முடித்தான். மீண்டும் கிவின்ஸ் கல்லூரியில் சேர்ந்து மூன்றாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றான். அந்தக் கல்லூரியில் ஒரு விதி இருந்தது. அதாவது ஒரு மாணவன் மற்ற மொழிகளில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தாலும் சீன மொழியில் தேர்ச்சி பெறவில்லையானால் அவனை மேல் வகுப்புக்கு அனுப்புவதில்லை என்பதுதான் அது.

அடுத்து இவனுக்குத் திருமணம். தந்தை இவனுக்காக முன்பு பார்த்திருந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்தார்கள். இதுவும் ஒரு கலப்பு மணந்தான் எப்படி? சன் ஒரு கிருஸ்தவன். பெண் சீனத்துக்காரி. என்றாலும் உறவினர்கள் கவலை கொள்ளாமல் திருமணத்தை முடித்து வைத்தார்கள். சீனர்களிலே ஒரு பழக்கமிருந்தது. திருமணமானவுடனே பெயரை மாற்றிக்கொள்வது. அந்தப் பெண்ணின் பெயர் லூசி என்றிருந்ததை டக்மங் என்று மாற்றப்பட்டது. ஆனால்,

பூ. 102 உ.-8