பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

125

நகரத்தைப் பிடித்து விட்டோமானால் மஞ்சு ஆட்சி ஒழிந்தது என்று பெருள். இப்படி ஒரு திட்டம் வகுத்தான் சன். இதற்காக இவன் முதலில் பத்து இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு சீன முற்போக்கு சங்கம் என்ற பெயரால் ஒரு சங்கத்தைத் தொடங்கினான். அதில் ஒவ்வொரு உறுப்பினரும் பத்து டாலர்கள் செலுத்தி விவிலியத்தை கையில் வைத்துக் கொண்டு உறுதி சொல்லி புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும்.

அதன் குறிக்கோளானது: “சீனத்தை மேன்மையடையச் செய்வதை குறிக்கோளாகக் கொண்டு பாடுபடுவது” என்பதாகும். ‘சீனர்கள் முற்போக்குசங்கம்’ என்ற ஒன்றை இரகசியமாகத் தொடங்கினான். சீன் இளைஞர்களுக்கு சமுதாய மாற்றம் தேவை என்பதையும் வலியுறுத்தப்பட்டது. வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் இதன் கருத்தைப் புரிந்துகொண்டால் போதும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டான். அடுத்து வேறோர் அறிக்கையையும் வெளியிட்டான்.

“இன்றைய சீனத்தின் போக்கு தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது. பழைய உறவு முறைகள் நற்பண்புகள் யாவும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. பெரிய அளவில் கவனிக்க வேண்டியவற்றைப் புறக்கணித்து விடுகிறார்கள். மற்ற வல்லரசுகள் சீனத்தைத் துண்டு போட்டுக்கொண்டு விட்டால் தங்கள் சந்ததிகள் நாளடைவில் என்னவாகும்?”

“ஐரோப்பாவிலுள்ள தலைவர்கள் சிலர் சீனாவையும், துருக்கியையும் குறிப்பிட்டுப் பேசுகிறபோது சாகும் தருவாயில் உள்ள நாடுகள் என்று பேசுவார்கள். இந்த அவமானத்தை, நாம் சகித்துக்கொண்டுதாணிருக்கவேண்டுமா?”


(குறிப்பு : பல ஆண்டுகளாகவே தெற்கு சீனத்தை பிரான்சும், மத்திய சீனாவை பிரிட்டனும், வடகிழக்கு சீனாவை ஜெர்மனியும், மஞ்சூரியாவை ருஷ்யாவும், செல்வாக்கான பகுதிகளென்று பங்கு போட்டுக் கொண்டன.)